இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 நவம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-11-24

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய திட்டமிடல் திணைக்களம்
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான வியாபார மற்றும் முதலீட்டுத் திணைக்களம்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(v) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை
(vi) 2013 மார்ச் 31 ஆம் வருடமுடிவுக்கான லங்காலேலன்ட் லிமிடெட்
(vii) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு நிலையம்
(viii) 2012 ஆம் ஆண்டுக்கான தேயிலை சிறு பற்றுநிலங்கள் அபிவிருத்தி அதிகார சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

தரம் 5 பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்ற உதவித் தொகையை நியாயமற்ற முறையில் மட்டுப்படுத்தல் தொடர்பானது


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ திளும் அமுணுகம அவர்களுக்கு “வரையறுக்கப்பட்ட கண்டி ஸ்ரீ புஷ்பதான சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களுக்கு “தர்மதீப நிறுவன (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் புத்தசாசன அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2016) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2016) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள் இன்றாகும்.


இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2015 நவம்பர் 26ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom