2015 நவம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-11-21 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.-
‘A’ : 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘B’ : அரசாங்கக் கணக்குக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘C’ : அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘D’ : பொது மனுக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம்
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகம்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை களனிப் பல்கலைக்கழகம்
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
(v) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்
(vii) 2012 ஆம் ஆண்டுக்கான ஊவா வெல்லஸ்ஸப் பல்கலைக்கழகம்
(viii) 2012 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத கல்வி நிறுவகம்
(ix) 2012 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவனம்
(x) 2012 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனம்
(xi) 2013 ஆம் ஆண்டுக்கான அனுராதபுர இலங்கை பிக்கு பல்கலைக்கழகம்
(xii) 2013 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவகம்
(xiii) 2013 ஆம் ஆண்டுக்கான மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானத்தில் உயர்தரக் கல்விக்கான தேசிய நிலையம்
(xiv) 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் 13(1) (ஈ) என்னும் பிரிவுடனும் 16 பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும் 112 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 மார்ச்சு மாதம் 25 ஆம் திகதிய 1907/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xv) 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் முத்திரைத் தீர்வை தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2015 செத்தெம்பர் மாதம் 21 ஆம் திகதிய 1933/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை
(xvi) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்திவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்திவரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2015 ஒற்றோபர் மாதம் 2 ஆம் திகதிய 1940/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை
(xvii) காலத்துக்குக் காலம் திருத்திப்பட்ட மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 22 ஆவது பிரிவின் (1) ஆம் உப பிரிவின் கீழ் மதுவரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2015 ஒற்றோபர் மாதம் 2 ஆம் திகதிய 1934/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 975, 976 மற்றும் 977)
(xviii) 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, இலங்கை மின்சார சட்டத்தின் 54 பிரிவின் கீழ் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சிபாரிசின் படி மின்வலு, சக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 யூன் மாதம் 08 ஆம் திகதிய 1918/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட மின்சார (மின் பரிசோதகர்களின் பணிகளும், கடமைகளும் மற்றும் நடவடிக்கை முறைகளும்) தொடர்பான ஒழுங்குவிதிகள்
(xix) 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்களின் போது 2 ஆம் பிரிவின் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் (3) ஆம் உட்பிரிவின் கீழ் நீதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2015 ஓகத்து மாதம் 06 ஆம் திகதிய 1926/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட முதலாம் நாள் இன்றாகும்.
2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு எனும் பிரேரணையின் இணைப்பிற்கான திருத்தம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
சபையால் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2015 நவம்பர் 23ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2016]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






