இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 நவம்பர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-11-06

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(ii) 2014 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட  குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2015


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் துறை மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள் புத்தளம் அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு செய்வதிலான புதிய நுட்பம் பற்றிய கூற்றினை சபையில் முன்வைத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2014 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்காக

ஒதுக்கீடு (திருத்தம்)

எனும் சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ பியல் நிசாந்த த சில்வா அவர்களுக்கு “இலங்கை உள, சமூக வேலை தொழில்வாண்மை நிறுவக (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ மயந்த திசாநாயக்க அவர்களுக்கு “ரோயல் புண்ணிய அமைப்பு மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-

(i) பொதுநிர்வாக கட்டமைப்பை மறுசீரமைத்தல்

தற்சமயம் பொதுநிர்வாக அமைச்சினால் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எல்லைகளை மீள நிர்ணயிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதோடு அவ்வாறு எல்லை நிர்ணயம் செய்யப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளினூடாக புதிய பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேச எல்லைகளையும் புதிய மாவட்ட எல்லைகளையும் நிர்ணயிக்க வேண்டுமெனவும், இவ்வாறு நிர்ணயிக்கப்படும் பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசங்கள் உள்ளூராட்சி மன்ற ஆளுகைப் பிரதேசங்களாக மாற்றியமைக்க வேண்டுமெனவும், அத்தகைய ஆளுகைப் பிரதேசத்தினுள் கோட்டக் கல்வி அதிகாரப் பிரதேசம், பொலிஸ் அதிகாரப் பிரதேசம், கமநல சேவைகள் அதிகாரப் பிரதேசம், பிரதேச சுகாதார சேவை உத்தியோகத்தர் அதிகாரப் பிரசேதம் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களினதும் அதிகாரப் பிரதேச எல்லைகள் உள்ளடங்கும் வகையில் ஒட்டுமொத்தமான பொதுத்துறைக் கட்டமைப்பு திருத்தப்பட வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

(ii) நில்வளா கங்கை திட்டத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பித்தல்

மாத்தறை மாவட்டத்தின் நில்வளா கங்கை திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் இடைநடுவில் முடங்கியிருப்பதால் அப்பள்ளத்தாக்கின் ஊட்டப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நில்வளா கங்கை திட்டத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளை விரைவில் மீள ஆரம்பிக்க வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

(iii) மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்களின் பிரதிநிதிகளின் பதவிக் காலத்துக்குப் பின்னரும், சமாதான நீதவான் பதவியினை வழங்குதல்

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுகின்ற, சமாதான நீதவான் பதவியானது, அவர்களது பதவிக் காலத்துக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளதாலும், இப்பதவிக்காலத்தின் பின்னரும், அவர்களிடம் மேற்படி சேவையினைப் பெறுவதற்காக வரும் அநேகமானோர் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதாலும், இம் மக்கள் பிரதிநிதிகளுக்கு தமது பதவிக்  காலத்தின் பின்னரும், சமாதான நீதவான் பதவியினை வழங்குவதற்கான தகுந்ததொரு வேலைத் திட்டத்தினை வகுத்தல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

(iv) மாகாண சபை மக்கள் பிரதிநிதிகள் அனைவரினதும் கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் குறித்து மீளாய்வு செய்தல்

நாட்டில் தற்போது இயங்கி வருகின்ற மாகாண சபைகளின் கெளரவ அமைச்சர்கள், தவிசாளர்கள், உபதவிசாளர்கள், ஆளும் கட்சியின் முதற்கோலாசான்கள், சபைத் தலைவர்கள், எதிர்க் கட்சித் தலைவர்கள், எதிர்க் கட்சியின் முதற்கோலாசான்கள் மற்றும் கெளரவ உறுப்பினர்கள் ஆகியோரின் கொடுப்பனவுகள், சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் ஒழுங்கான முறையில் காணப்படாமையினால், இது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து அதற்கான ஒழுங்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென  இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

(v) உள்ளூராட்சி நிறுவனங்களின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்தல்

நாட்டில் நடைமுறையிலுள்ள மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனைத்து மாநகர சபை, நகர சபை, மற்றும் பிரதேச சபைகளினதும் நகரபிதாக்கள், நகர சபைத் தலைவர்கள், மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், பிரதி நகரபிதாக்கள், பிரதி நகர சபைத் தலைவர்கள், உப தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கெளரவ உறுப்பினர்கள் ஆகியோரின் கொடுப்பனவுகள், சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் ஒழுங்குமுறையாக இல்லாத காரணத்தால் இது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து இதற்கான ஒழுங்குமுறையுடன் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.


அதனையடுத்து, 1838 மணியளவில் பாராளுமன்றம் 2015 நவம்பர் 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1400 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom