2015 நவம்பர் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-11-05 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-
(i) 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் X மற்றும் ஆறாவது தொகுதியின் XXI ஆம் பகுதிகளையும்;
(ii) 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XIII ஆம் மற்றும் XIV ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் V ஆம் பகுதியையும் ஐந்தாம் தொகுதியின் I ஆம் பகுதியையும்;
(iii) 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் I ஆம் பகுதியையும்
சமர்ப்பித்தார்.
இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் நிருவாக அறிக்கை
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
யாழ்ப்பாண கோட்டை புனரமைப்பு தொடர்பானது
(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி காரணமாக எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதார கொள்கை பற்றிய கூற்றின சபையில் முன்வைத்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ அப்துல்லா மஹரூப் அவர்களுக்கு “மர்கஸ் ஸக்காபதுல் இஸ்லாமிய்யா (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழான மூன்று தீர்மானங்கள்
(iii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(iv) இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை மீளக் குடியமர்த்துதல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ வேலு குமார் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2015 நவம்பர் 06ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






