இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 நவம்பர் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-11-03

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்
‘B’: தெரிவுக்குழுவின் கூட்டம்


சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

இவ்வறிக்கையை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம்
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iii) 2012 ஆம் ஆண்டுக்கான அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவகம்
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனம்
(v) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(vi) 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 26 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 மே மாதம் 18 ஆம் திகதிய 1915/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ இராஜவரோதியம் சம்பந்தன் அவர்கள்

கொழும்பு 7, வோட் பிளேஸில் கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i) உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல - வர்த்தக பட்டத்திற்கு சமமாக HNDA அந்தஸ்தை மீட்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கை

(ii) சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்,  கௌரவ திலக் மாரபன - HNDA சம்பவம் தொடர்பான தற்போதைய நிலைமை

ஆகியோர் சபையில் கூற்றுக்களை முன்வைத்தனர்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கு “அங்கவீனர்களுக்கான ஆலோசனை உதவிகளையும் வழங்குவதற்கான திதொரா தியேட்டர் நிறுவகம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களுக்கு “ரவிச்சந்திர அமைப்பு (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள்

சபையால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“ஆயுதப் படைக்கான உணவு வழங்கல் ஏற்பாடுகளின் போதான மோசடி” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ புத்திக பத்திறண அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1838 மணியளவில் பாராளுமன்றம் 2015 நவம்பர் 04ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom