இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 ஒக்டோபர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-10-23

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.-

‘A’ : அரசாங்கக் கணக்குக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘B’ : அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘C’ : சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2012 ஆம் ஆண்டுக்கான அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஆண்டறிக்கை


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2016 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின்போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாடுகளைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளுக்கான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டுநிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குக் கிடைக்கக் கூடியதாகவுள்ள அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணமாகக் கொடுப்பதை இயலச் செய்வதற்கும்; திரட்டுநிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

ஒதுக்கீடு

எனும் சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ அலி ஸாஹிர் மௌலானா செயிட் அவர்களுக்கு “மனித உரிமைகள் அமைப்பு (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களால் 2015.10.22 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் (UNHRC) இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்” எனும் ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 நவம்பர் 03ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom