இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 ஒக்டோபர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-10-22

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-

‘A’  : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டுக்கான வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான சட்ட அலுவல்கள் திணைக்களம்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான அரச தொழில்முயற்சிகள் திணைக்களம்
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான விலை மதிப்புத் திணைக்களம்
(v) 2014 ஆம் ஆண்டுக்கான கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ அப்துல்லா மஹரூப் அவர்களுக்கு “ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் (UNHRC) இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஒக்டோபர் 23ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom