2015 ஒக்டோபர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-10-20 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’: 2015 செப்டெம்பர் 23ஆம் திகதி விவாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான சபாநாயகரின் தீர்ப்பு
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) “உதலாகம” மற்றும் “பரணகம” சனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை
(ii) சர்வதேச தொழில் தாபனத்தினால் அதன் 2014 ஆம் ஆண்டு 103 ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமவாயம் 29 இற்கான வரைவேடு
(iii) சர்வதேச தொழில் தாபனத்தினால் அதன் 2014 ஆம் அண்டு 103 ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதப்புரை
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான நவீன தொழில்னுட்பவியல்களுக்கான ஆதர் சீ கிளார்க் நிறுவகம்
(v) 2014 ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சு
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை
(vii) 2012 ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனம்
(viii) 2013 ஆம் ஆண்டுக்கான வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(ix) (52 ஆவது அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 32 ஆவது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 25 ஆம் பிரிவின் கீழ், மதுவரி உரிமம் தொடர்பில், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 பெப்புருவரி மாதம் 13 ஆம் திகதிய 1901/19 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(x) 2014 ஆம் ஆண்டுக்கான பொதுத்திறைசேரியின் அரசிறைக் கொள்கைகள் திணைக்களம்
(xi) 2013 ஆம் ஆண்டுக்கான விவசாயத் திணைக்களம்
(xii) 2014 ஆம் ஆண்டுக்கான நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சு
(xiii) 2014 ஆம் ஆண்டுக்கான இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(xiv) 1985 ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களினால் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவுடனும் மற்றும் 14 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கிழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 யூன் மாதம் 11 ஆம் திகதிய 1918/22 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது யப்பான் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பான கூற்றினை சபையில் முன்வைத்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா அவர்களுக்கு “கஷி புண்டா ஸ்ரீ லங்கா மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையில் முன்வைக்கப்பட்டன:-
(i) உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் - பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டதுடன் பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டுச் சட்டமூலங்கள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-
(ii) உண்ணாட்டரசிறை (திருத்தம்)
(iii) நிதிச் சட்டமூலம்
(iv) சேர்பெறுமதி வரி (திருத்தம்)
(v) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)
(vi) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்)
(vii) பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சமுர்த்திக்கான புதிய மாற்று ஏற்பாடு” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எட்வட் குணசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, மணியளவில் பாராளுமன்றம் 2015 ஒக்டோபர் 21ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






