2015 ஒக்டோபர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-10-09 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : உயர் பதவிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்
‘B’: நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டுக்கான வனசீவராசி வளங்கள் பாதுகாப்பு அமைச்சு
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொதுப் பொழுதுபோக்கு அலுவல்கள் அமைச்சு
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான இலங்கை முகவராண்மை
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களுக்கு “சமாதானம், கல்வி, வலுவளிப்பு மற்றும் அபிவிருத்திக்கான விளையாட்டு நிறுவகத்தை (SPEED) (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(ii) கெளரவ ஜானக வக்கும்புர அவர்களுக்கு “அருந்திக பர்னாந்து நிவாரண சேவைகள் மற்றும் கொட்பிறி பர்னாந்து ஞாபகார்த்த மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் திருட்டுத்தனமாக நுழைவதலான பிரச்சினை” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ விஜித ஹேரத் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1751 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஒக்டோபர் 20ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






