2015 ஒக்டோபர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-10-08 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் உயிரின செய்கை அபிவிருத்தி அதிகார சபை
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை துறைமுக அதிகாரசபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
உயர் பதவிகள் பற்றிய குழு
128அ மற்றும் 129 (அ) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், உயர் பதவிகள் பற்றிய குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகவும் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் பன்னிரண்டு (12) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ நலின் பண்டார ஜயமஹ அவர்களுக்கு “சுஜீவ சேனசிங்க மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை
சபையினால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சமிந்த விஜேசிறி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஒக்டோபர் 09ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






