2015 ஒக்டோபர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-10-06 |
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘B’: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 154 ஆர் (4) பிரகாரம் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவினால் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்குச் சமர்ப்பிக்கும் பரிந்துரைகள்
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான கரையோரம் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கம்
(v) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களம்
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களம்
(vii) 2014 ஆம் ஆண்டுக்கான அரச நிதித் திணைக்களம்
(viii) 2014 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
(ix) 2014 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களம்
(x) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை மதுவரித் திணைக்களம்
(xi) 2014 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு
(xii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை நில அளவைத் திணைக்களம்
(xiii) 2014 ஆம் ஆண்டுக்கான காணி உரித்து நிருணய ஆணையாளர் நாயகம்
(xiv) 2014 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(xv) 2013 ஆம் ஆண்டுக்கான நில அளவைச்சபையின் ஆண்டறிக்கை
(xvi) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம்.
(2015 மே 05 ஆந் திகதிய 1913/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்;
(xvii) 2015 மார்ச்சு 25 ஆம் திகதிய 1907/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(xviii) 2015 ஏப்பிறல் 01 ஆந் திகதிய 1908/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(xix) 2015 ஏப்பிறல் 23 ஆம் திகதிய 1911/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(xx) 2015 யூன் 05 ஆந் திகதிய 1917/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(xxi) 2015 யூன் 16 ஆந் திகதிய 1919/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(xxii) 2015 யூன் 29 ஆந் திகதிய 1921/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(xxiii) 2015 யூலை 20 ஆந் திகதிய 1924/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(xxiv) 2015 செத்தெம்பர் 07 ஆந் திகதிய 1931/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(xxv) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 3 உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2015 மே 05 ஆந் திகதிய 1913/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxvi) 2014 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2015
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் நலன்புரி முகாம்களுக்கு வசதிகள் அளித்தல் தொடர்பானது
(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
களனி ஆற்றின் உள்ள அசுத்தமான நீர் தொடர்பானது
நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
முறையே “ஏ” நிலையியற்குழு மற்றும் “பீ” நிலையியற்குழு என்றழைக்கப்படும் இரண்டு சட்டவாக்க நிலையியற்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும்;
ஒவ்வொரு குழுவும் பதினைந்து (15) உறுப்பினர்களைக் கொண்டிருப்பதோடு ஏதேனுமொரு குறித்த சட்டமூலமொன்று பரிசீலனைக்கு விடப்படுமிடத்து மேலதிகமாக பதினைந்து (15) உறுப்பினர்களுக்கு விஞ்சாத எண்ணிக்கையினை ஒவ்வொரு குழுவுக்கும் நியமிப்பதற்கு சபாநாயகர் அதிகாரமளிக்கப் பட வேண்டும் என்றும்;
ஒவ்வொரு குழுவினதும் கூட்ட நடப்பெண் நான்கு (4) ஆக இருக்க வேண்டும் என்றும் கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் முன்வைத்த பிரேரணையை சபை இணங்கியேற்றது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“மரண தண்டனை விதித்தல்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஒக்டோபர் 07ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






