PARLIAMENT

OF SRI LANKA

SinhalaSriLankaTamil-SriLanka

நிலையியற் கட்டளை 52

  1. 52ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ், ஒரு தனியார் உறுப்பினரின் சட்டமூலம் பாராளுமன்றத்திலே பெறப்படும்போது அச்சட்ட மூலமானது 52(4) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் மூன்று மொழிகளிலும் வர்த்தமானி-குறைநிரப்பி ஒன்றாக சட்டமூல அலுவலகத்தினால் ஒப்பீடு செய்யப்பட்டு அச்சிடப்படுகின்றது.
  2. வர்த்தமானி வெளியிடப்பட்ட திகதி இருந்து பதினான்கு நாட்கள் கழிந்ததன் பின், சட்டமூலமானது, சட்டமூல அலுவலகத்தினால் முதலாம் மதிப்பீட்டிற்காக 52(5) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஒழுங்குப் பத்திரத்திலே சேர்க்கப்படுகின்றது.
  3. முதலாம் மதிப்பீட்டின் பின்பும், சட்டமூலம் அச்சிடப்படுவதற்குக் கட்டளையிடப்பட்டதன் பின்பும், சட்டமூலத்திற்கு ஓர் இலக்கம் வழங்கப்பட்டு, அச்சிடப்பட்டு 52(6) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அறிக்கையிடுவதற்காக அனுப்பிவைக்கப்படுகின்றது.
  4. அமைச்சரின் அறிக்கையானது, அரசியலமைப்பின் உறுப்புரை 77 இற்கு அமைய, சட்ட மாஅதிபரின் குறிப்புரைகளுடனும் அமைச்சரவை அங்கீகாரத்துடனும் பாராளுமன்றத்திற்குக் கிடைக்கப் பெற்றதன் பின்பு,சட்டமூலமானது ஓர் அறிக்கை வடிவிலே அச்சிடப்பட்டுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
  5. அமைச்சரின் அறிக்கையானது, ஆறு மாதங்களினுள் பெறப்படாவிட்டால் சட்டமூலமானது 52(7)ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம், சட்டமூல அலுவலகத்தினால் அவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் விரும்பும் தினத்தில் இரண்டாம் மதிப்பீட்டிற்காக ஒழுங்குப் பத்திரத்திலே சேர்க்கப்படும்.

Share This On

Last Updated on 24-04-2018

Parliament Calendar

download parliament mobile app

Mailing List Subscription

Copyright © The Parliament of Sri Lanka. All Rights Reserved.

Solution by: Lankacom