இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றச் செயலாளர் நாயகம்

பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தின் பிரதம நிறைவேற்று அலுவலராவார். அவர் பாராளுமன்றப் பேரவையின் இணக்கத்துடன், ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார். பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பதவி, அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு பதவியாகும்.

 

பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பிரதான பணிகளில் ஒன்று, பாராளுமன்ற நடவடிக்கை முறை, சட்டமூலங்கள் அரசியலமைப்புக்கு இயைபாகவிருத்தல், நிலையியற் கட்டளைகள், சிறப்புரிமைகள் ஆகியன தொடர்பான விடயங்களிலும், பாராளுமன்ற நடவடிக்கை பற்றிய வேறு ஏதேனும் விடயங்களிலும் சபாநாயகர் மற்றும் ஏனைய தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு, ஆலோசனை வழங்குதலாகும். பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அவரது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குப் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகமும் உதவுவர்.

 

செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தின் பிரதம நிருவாகத்தரும் கணக்கீட்டு அலுவலருமாவார். பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாளர்கள் சபாநாயகரின் அங்கீகாரத்துடன் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்படுவர். செயலாளர் நாயகம் அல்லது அவரின் நியமத்தர் பாராளுமன்றத்தினால் தாபிக்கப்படும் எல்லாக் குழுக்களுக்கும் செயலாளராகப் பணியாற்றுவார்.

 

மேலே செல்ல

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2012-06-21 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom