தனி உறுப்பினர் சட்டமூலங்கள்
![]() |
நிலையியற் கட்டளை 47 |
| 1. |
47 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமொன்று கிடைக்கும்பொழுது, சட்டமூல அலுவலகமானது அதனை மூன்று மொழிகளிலும் ஒத்துப் பார்த்து, 47(3) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் கசெற்றில் அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். |
| 2. |
கசெற்றில் வெளியிடப்பட்டு ஏழு நாட்களுக்குப் பின்பு சட்டமூல அலுவலகமானது, 47(4) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அச்சட்டமூலம், முதலாம் மதிப்பீட்டின் நிமித்தம் ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெறச் செய்விக்கும். |
| 3. |
முதலாம் மதிப்பீட்டின் பின்பு குறிப்பிட்ட சட்டமூலத்தை அச்சிடுவதற்கான கட்டளை வழங்கப்படும் பட்சத்தில், சட்டமூல அலுவலகமானது அச்சட்டமூலத்திற்கு ஓர் இலக்கத்தினை வழங்கி, அதனை அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் 47(5) நிலையியற் கட்டளையின் பிரகாரம் அறிக்கையிடும் பொருட்டுப் பொருத்தமான அமைச்சருக்கும் அனுப்பி வைக்கும். |
| 4. |
அமைச்சரின் அறிக்கை பாராளுமன்றத்திற்குக் கிடைத்ததன் பின்பு, சட்டமூல அலுவலகமானது மூன்று மொழிகளிலும் அதனை ஒத்துப் பார்த்து அச்சிடுவதற்கும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும். |
| 5. |
அமைச்சரின் அறிக்கை ஆறு மாதத்திற்குள் கிடைக்காதவிடத்து, சட்டமூல அலுவலகமானது, 47(6) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம், அதற்குப் பொறுப்பான உறுப்பினர் விரும்பும் தினத்தில் இரண்டாம் மதிப்பீடு செய்யப்படுவதற்காக அச்சட்டமூலம் ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








