2019 மார்ச் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-03-08 |
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : “இலங்கை ஔடதங்கள் சங்கம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
‘B’ : அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
‘C’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
2018 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான (2018.07.01 - 2018.09.30) தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் ஆண்டறிக்கை
(ii) 2014/2015 ஆம் ஆண்டுக்கான கஹடகஹ கிறபைட் லங்கா லிமிடெட்டின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களுக்குப் பதிலாக கௌரவ கே.கே. பியதாஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ திலிப் வெதஆரச்சி - நான்கு மனுக்கள்
(ii) கௌரவ சமல் ராஜபக்ஷ
(iii) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
கிளிநொச்சி மாவட்டத்துக்கான “கம்பெரலிய” நிகழ்ச்சித்திட்டம்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள் இன்றாகும்.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“விசேட தேவையுடைய நபர்களுக்கான உதவித்தொகை மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1900 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2019 மார்ச் 09ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2019]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






