இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 மார்ச் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-03-07

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VII மற்றும் VIII ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை

(ii)    2018 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றச் சபை முதல்வரின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2017 ஆம் ஆண்டுக்கான பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் செயல்திறன் அறிக்கை மற்றும் கணக்குகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ புத்திக பத்திறண      -    மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ

கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ அநுர திசாநாயக்க

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற விசர் நாய் கடி நோய் கட்டுப்பாட்டுச் நிகழ்ச்சித் திட்டத்தை சுகாதார அமைச்சு எடுத்துக் கொள்ளல்

மேற்சொன்ன சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2019) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2019) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள் இன்றாகும்.


இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2019 மார்ச் 08ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2019]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom