2019 பெப்ரவரி 20ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-02-20 |
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : மின்னுயர்த்தி பழுதடைதல் தொடர்பானது
‘B’ : அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியின் XXXII ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி லொத்தர் சபையின் ஆண்டறிக்கை
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் வருடாந்த கணக்குகள்
(iv) 2017 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2018.12.01 முதல் 2018.12.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் காட்சு - ஹய்லி அட்வான்ஸ்ட் மெடிகல் டெக்னலொஜி ட்ரெய்னிங் சென்றர் (பிறைவேட்) லிமிட்டெட் (KIU) மற்றும் எஸ்.எல்.ரீ கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் கம்பனி ஆகியவற்றினை பட்டம் வழங்கும் நிறுவனங்களாக அங்கீகரித்து நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 சனவரி 09 ஆம் திகதிய 2105/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(vi) 2016 ஆம் ஆண்டின் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4(3) ஆம் பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரின் கீழ் வாகனம் வெளியேற்றும் மாசுத் தரங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்/ தரங்கள் தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 சனவரி 25 ஆம் திகதிய 2107/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஜோன் அமரதுங்க
(ii) கௌரவ அஜித் மான்னப்பெரும - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
(iv) கௌரவ தேனுக விதானகமகே
(v) கௌரவ பிரசன்ன ரணவீர
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ மஹிந்த ராஜபக்ஷ
உள்ளூர் திரைப்படைத் துறையில் நிலவும் பிரச்சினைகள்
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
2015 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம்
மேற்சொன்ன வினாவிற்கு பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டாரஅவர்கள் பதிலளித்தார்.
(iii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
முல்லைதீவு பகுதி மீனவர்களுக்கான வெளிச்ச வீடு
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2019 பெப்ரவரி 21 ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






