2019 பெப்ரவரி 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-02-08 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41எ (1) உறுப்புரையின் பிரகாரம் சனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது அறிக்கை
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஆறாவது தொகுதியின் XXIV மற்றும் XXV ஆம் பகுதிகளையும்;
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXVIII ஆம் பகுதியையும் மற்றும் நான்காவது தொகுதியின் IX ஆம் பகுதியையும்; மற்றும்
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் V, VI மற்றும் VII ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதியையும், பத்தாவது தொகுதியின் XXV, XXVI மற்றும் XXX ஆம் தொகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2015 ஆம் ஆண்டுக்கான ரணவிரு சேவா அதிகாரசபையின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லக்கி ஜயவர்தன அவர்களுக்குப் பதிலாக கௌரவ ஏ.ஏ. விஜேதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்களுக்குப் பதிலாக கௌரவ சந்தித் சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்குப் பதிலாக கௌரவ முஜிபுர் ரஹுமான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களுக்குப் பதிலாக கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ வசந்த அலுவிஹாரே
(ii) கௌரவ சிறினால் டி மெல்
(iii) கௌரவ துஷார இந்துனில் அமரசேன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ மஹிந்த ராஜபக்ஷ
அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்த அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
சிங்கராஜ வனப் பகுதியில் நிர்மாணிக்கப்படும் வீதி
மேற்சொன்ன வினாவிற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்கள் பதிலளித்தார்.
(iii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
வடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கான நட்டஈடு
மேற்சொன்ன வினாவிற்கு கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பி. ஹரிசன் அவர்கள் பதிலளித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாவுக்கான பதில்
அரச ஊழியர்களுக்கான தீர்வையற்ற வாகனங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்தல் தொடர்பாக 2019.01.25 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ இரான் விக்கிரமரத்ன அவர்கள் பதிலளித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை (2017.07.01 முதல் 2017.09.30 வரை)” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1844 மணியளவில் பாராளுமன்றமானது 2019 பெப்ரவரி 20 ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






