இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஜனவரி 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-01-25

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பு பேரவை தொடர்பானது
‘B’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
‘C’ :  எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பானது


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 58 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 39 ஆம் பிரிவின் கீழ் வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களை தற்காலிகமாக பதிவுசெய்தல் தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய 2085/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(ii)    2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 58 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 38 ஆம் பிரிவின் கீழ் அடையாளம் காணப்பட்ட நிர்மாண வேலைக்கான நடவடிக்கைமுறைகள் மற்றும் தராதரங்கள் தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய 2085/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ விஜித ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ விஜித ஹேரத்                               
(ii)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே             -               மூன்று மனுக்கள்
(iii)    கௌரவ நிஹால் கலப்பத்தி              -               இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ அநுர திசாநாயக்க

அரச ஊழியர்களுக்கான தீர்வையற்ற வாகனங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்தல்

(ii)    டக்ளஸ் தேவானந்தா

அமெரிக்க கடற்படை முகாம் ஒன்றினை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைத்தல்

மேற்சொன்ன வினாவிற்கு பாராளுமன்ற சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பதிலளித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“மாகாண சபைத் தேர்தலை நடாத்துதல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1645 மணியளவில் பாராளுமன்றமானது 2019 பெப்ரவரி 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom