இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

chamber-front

நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

chamber-front

தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

Parliament

2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

அறிக்கை

  • நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

    அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    மேலும் வாசிக்க

  • தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

    ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் வாசிக்க

  • 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

    அறிக்கை


மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை பாராளுமன்றத்தில்

2025-09-23
1
மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலை அனுமதிக்காக நாளை (24) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (செப். 23) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் 2025.09.21ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2454/68 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலே பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.  
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-23 மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல...
2025-09-22 தேசிய கணக்காய்வு (திருத்த)...
2025-09-18 இலங்கையின் மின்சாரத் துறை...
2025-09-17 பாராளுமன்றம் செப்டெம்பர் 23 முதல்...
2025-09-17 கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய...
மேலும்

2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

2025-09-24
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i)    2023 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை.(ii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் ஆண்டறிக்கை.(iii)    2023 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை.குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) நஜீத் இந்திக்க...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-24 2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை...
2025-09-23 2025 செப்டம்பர் 23ஆந் திகதியின் சபை...
2025-09-12 2025 செப்டம்பர் 12ஆந் திகதியின் சபை...
2025-09-11 2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை...
2025-09-10 2025 செப்டம்பர் 10ஆந் திகதியின் சபை...
மேலும்

செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2025-09-12
2025, செப்டம்பர் 11 மற்றும் 23 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-  
மேலும் வாசிக்க

அமர்வு வார
1வது நாள்
தலைப்பு
2025-09-23 செப்டம்பர் இரண்டாம் அமர்வு...
2025-09-09 செப்டம்பர் முதலாம் அமர்வு...
2025-08-19 ஆகஸ்ட் இரண்டாம் அமர்வு...
2025-08-05 ஆகஸ்ட் முதலாம் அமர்வு வாரத்திற்கான...
2025-07-22 ஜூலை இரண்டாம் அமர்வு வாரத்திற்கான...
மேலும்

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்)

2021-07-16
குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2021-07-16 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை...
2021-07-02 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-06-21 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-05-12 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மே மாத...
2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
மேலும்
அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை
2025.09.09 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை

அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக

தற்போதைக்குநடப்பு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எவையும் இல்லை
மேலும்...

சபைசுற்றுலா

பாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க

படத்தொகுப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சின்னங்கள்..பார்க்க

விவரணக்காட்சி

இலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க

சமகால உரைபெயர்ப்பு

இலங்கைச் சட்டசபையில் சமகால உரைபெயர்ப்பு முதன்முதலில் 1957ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதியினை முதன்முதலில், ஆசியப் பிராந்தியத்தில், தனது சட்டசபையில் அறிமுகப்படுத்திய நாடு இலங்கையாகும். ஆரம்பத்தில், சிங்களம் மற்றும் தமிழ் உரைகளை ஆங்கிலத்திற்கு உரைபெயர்க்கும் வசதி மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் இந்த வசதி விஸ்தரிக்கப்பட்டு, இன்று ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளுக்கு உரைபெயர்ப்பு வழங்கப்படுகின்றது

தற்போது இலங்கைப் பாராளுமன்றத்தில், மூன்று துறைகளைச் சேர்ந்த (சிங்களம்/ தமிழ்/ சிங்களம், சிங்களம்/ ஆங்கிலம்/சிங்களம், தமிழ்/ ஆங்கிலம்/ தமிழ்) 24 உரைபெயர்ப்பாளர்கள் உள்ளனர். உரைபெயர்ப்பாளர் பிரிவு பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளரின் தலைமையில் இயங்குகின்றது. இந்தப் பணியின் தனிச்சிறப்பு என்னவென்றால், உரைகள் நிகழ்த்தப்படும் கணத்திலேயே உரைபெயர்க்கப்பட்டு, சமகாலத்தில் உரைபெயர்ப்பு வழங்கப்படுவதாகும். பாராளுமன்ற உறுப்பினர்களினால் நிகழ்த்தப்படும் அனைத்து உரைகளும் ஏனைய இரு மொழிகளுக்கும் உரைபெயர்க்கப்படுகின்றன உதாரணமாக, ஓர் உறுப்பினர் ஆங்கிலத்தில் உரையாற்றினால், அவ்வுரை சமகாலத்திலேயே சிங்களத்திலும் தமிழிலும் உரைபெயர்க்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து தங்களிற்கு விருப்பமான மொழியைத் தெரிவு செய்து அதைக் காதில் அணிந்து கொள்ளும் கருவி மூலம் செவிமடுக்கலாம். சபாமண்டபத்திலுள்ள ஒவ்வொரு ஆசனத்திற்கும் மொழித் தெரிவு ஆளியும் அதனைச் செவிமடுப்பதற்கான காதில் பொருத்தும் கருவியும் வழங்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, ஊடகத்துறையினர், சபாநாயகரின் பணியாளர்கள், பாராளுமன்றத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள், சபாநாயகரின் கலரியிலுள்ள விருந்தினர்கள், கலரியிலுள்ள அரச அதிகாரிகள் போன்றோரும் இந்த உரைபெயர்ப்பு வசதியினைப் பயன்படுத்துகின்றனர். காதில் பொருத்தும் கருவிகள் பத்திரிகையாளர் கலரியிலும் ஏனைய இடங்களிலும் கிடைக்கப் பெறுகின்றன

ஒவ்வொர் உறுப்பினருக்கும் அவரின் உரை செவிமடுக்கப்படுவதற்கும், அதேபோலவே ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களினால் என்ன கூறப்படுகின்றது என்பதைச் செவிமடுப்பதற்கும் உரிமை இருக்கின்ற காரணத்தினால், சமகால உரைபெயர்ப்பானது இச்சபையின் அத்தியாவசிய சேவையாகிவிட்டது. உரைகள் மற்றும் ஏனைய கூட்ட நடவடிக்கைகள் போன்றவை ஏனைய இரு மொழிகளுக்கும் உரைபெயர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது கௌரவ சபாநாயகரின் கடமை என, 12 ஆம் நிலையியற் கட்டளை தெளிவாகக் குறித்துரைக்கின்றது.

தேவைப்படும்பொழுது, பாராளுமன்றக் குழுக்களுக்கும் உரைபெயர்ப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவ்வாறான குழுக் கூட்டங்கள் குழு அறையில் 1 அல்லது 2 இல் நடைபெறும்பொழுது அங்கே உரைபெயர்ப்பு வசதிகள் இருக்கின்றன. உரைகள் மற்றும் ஏனைய கூட்ட நடவடிக்கைகள் போன்றவை ஏனைய இரு மொழிகளுக்கும் உரைபெயர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது கௌரவ சபாநாயகரின் கடமை என, 12 ஆம் நிலையியற் கட்டளை தெளிவாகக் குறித்துரைக்கின்றது. தேவைப்படும்பொழுது, பாராளுமன்றக் குழுக்களுக்கும் உரைபெயர்ப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவ்வாறான குழுக் கூட்டங்கள் குழு அறையில் 1 அல்லது 2 இல் நடைபெறும்பொழுது அங்கே உரைபெயர்ப்பு வசதிகள் இருக்கின்றன.

மேலே செல்ல

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2012-07-31 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom