இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரம்)

திகதி : 2015-05-25

mace

 

19 மே 2015

இத்தினத்திற்கு திட்டமிடப்பட்ட “குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை” விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. திறைசேரி முறிகள் விநியோகம் தொடர்பாக மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அர்ஜூன மகேந்திரன் அவர்களின் செயற்பாடு தொடர்பாக விவாதமொன்றை எதிர்க்கட்சி கோரியதன் காரணமாக சபை பலதடவைகள் இடைநிறுத்தப்பட்டதுடன், இறுதியாக ஒத்திவைக்கப்பட்டது.

 

 

20 மே 2015

குடிவருவோர், குடியகல்வோர் (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூல சட்டமூலமான 1948 ஆம் ஆண்டு 20ம் இலக்க சட்டத்தின் 351 ஆம் அத்தியாயம் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு அல்லது கடவுச்சீட்டினை புதுப்பிப்பதற்கு அல்லது விண்ணப்பிப்பதற்கு, விண்ணப்பதாரியின் விரல் அடையாளம் எடுக்கப்படலாம்.

 

 

 

21 மே 2015

தேசிய ஆசிரியர் கல்வி அதிகாரசபை (நீக்கல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 1997ம் ஆண்டு 32ம் இலக்க சட்டத்திற்கு அமைய இந்த அதிகாரசபை (NATE) உருவாக்கப்பட்டது. இது உலகவங்கியின் நிதித்திட்டத்துடன் செயற்படுத்தப்படுகிறது. இச்சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் இவ்வதிகார சபையினை கலைத்துவிட முடிவுசெய்யப்பட்டது.

 

அதன் பின்னர், திறைசேரி முறிகள் விநியோகம் தொடர்பாக கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் அறிக்கை தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்றது. இப் பிரேரணை எதிர்கட்சியினரால் சபைக்கு கொண்டுவரப்பட்டது.

 

 

22 மே 2015

அனுபவமிக்க அரசியல்வாதியாக 30 ஆண்டுகளாக கம்பஹா தேர்தல் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்திய மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ் டி பண்டாரநாயக்கா அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்னாரது 97வது வயதில், 2014 ஜூன் 3ஆம் திகதியன்று காலமானார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom