இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரம்)

திகதி : 2015-03-24

Print

mace

 

17 மார்ச் 2015

குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கேவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெற்றது. இச்சட்டமூலம் 1979 ஆம் ஆண்டில் (சட்டம் எண் 15) நிறைவேற்றப்பட்டதுடன் பின்னைய ஆண்டுகளில் இது பல திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இச்சட்டம் 2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டபடி சந்தேகநபர் பொலிசாரின் விசாரணைக்காக 24 மணித்தியாலங்களுக்கு தடுத்துவைத்திருக்க முடியும். சந்தேகநபர் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நீதவான் முன்னிலையில் அஐர்படுத்தப்பட வேண்டும். அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி பெரிய குற்றமாயின் கைதுசெய்து தடுத்துவைக்கும் காலம் 48 மணித்தியாலங்களுக்கு மேற்படலாகாது. இந்த விதிகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்றத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும். எனவே இதனை, நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

 

கெளரவ. பிரதமர் மத்திய வங்கியின் முறிகள் வினியோகம் தொடர்பான விசேடமாக உரையினை நிகழ்த்தினார்.

 

 

18 மார்ச் 2015

1968 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் 45 ம் இலக்கம் ஒழுங்குவிதிகள் சட்டம்முலம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஐ நா சபை உறுப்பினர்களின் தீர்மானங்களை பொருட்டு, தேசிய சட்டங்கள் அமுல் செய்ய வேண்டும் . அதன்படி, பாராளுமன்றத்தில் இச்சட்டமூலம் வெளிவிகார அமைச்சரால் கொண்டுவரப்பட்டு விவாதம் இடம்பெற்றதுடன் சட்டமூலம் அல் காயிதா மற்றும் தலிபான் தடை குறித்து நிறைவேற்றப்பட்டது.

 

 

19 மார்ச் 2015

குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கேவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் ஒத்திவைப்புமீதான விவாதம் நடைபெற்றது. விவாதம் முடிவில், அது நிறைவேற்றப்பட்டது மற்றும் பாராளுமன்ற ஒரே ஒரு உறுப்பினர் எதிராக வாக்களித்தார்.

 

மத்திய வங்கியின் திறைசேரி முறிகள் வினியோகம் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது. கெளரவ பிரதமர் அவர்கள் 17.03.2015 அன்று ஆற்றிய விசேட உரையினை தொடர்சியாக இப்பிரேரணையினை கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களால் சமர்ப்பிக்கப்படது.

 

 

 

20 மார்ச் 2015

தற்போதைய நாட்டின் நிதிநிலைமை மற்றும் படுகடன் தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.