இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரம்)

திகதி : 2015-02-25

mace

 

18 பெப்ரவரி 2015

கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச் ) சட்டமூலம் பாராளுமன்ற சபையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 49 ஆம் பிரிவானது திருத்தப்பட்டது. இத்திருத்தச் சட்டத்தின் 14அ அல்லது 14ஊ என்னும் பிரிவின் ஏற்பாடுகளை மீறுகின்ற அல்லது அவற்றுடன் இணங்கியொழுகத் தவறுகின்ற எவரேனுமாள் தவறொன்றைப் புரிந்தவராதல் வேண்டும் என்பதுடன் நீதிவானொருவர் முன்னிலையிலான சுருக்கமுறை விளக்கத்தின் பின்னர் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டதன் மேல் இரண்டு ஆண்டுகளை விஞ்சாத காலப்பகுதி ஒன்றுக்கான மறியல் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார். அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட மீன்பிடிபடகின் நீளத்தைகருத்தில் கொண்டும் அனுமதியற்ற மீன்பிடி முறைகள், காலங்கள் மற்றும் விஞ்ஞான நோக்கங்கள் போன்றவைகள் தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும்.

 

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் 11 ஆம் மற்றும் 14 ஆம் பிரிவுகளில் நீதிவான் நீதிமன்றம் ஏதேனும் குற்றப்பணத்தை விதிப்பதற்குமான நியாதிக்கத்தைக் கொண்டுள்ளது.

 

19 பெப்ரவரி 2015

குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் விவாததத்திற்கு எடுத்துக் கொள்ளபட்டு பின்னர் நிறைவேற்றப்பட்து. குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும், உரிமைகளையும் எடுத்துக் கூறுவதற்கும் அத்தகைய உரிமைகளைப்பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், சாட்சிகளினதும் பாதுகாப்பு தொடர்பான நியமங்களும் செயல்முறைகளும் பயன்கொடுப்பதற்கு சாட்சிகளினதும் பாதுகாப்ப்பதற்கான தேசிய அதிகாரசபை தாபித்தல். பொலிஸ் மா அதிபர் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு பாதுகாப்பை வழங்க சிரேஷ்ட பொலீஸ் பரிசோதகரின் (எஸ்.எஸ்.பி) கீழ் செயல்படும் ஒரு பிரிவினை நிறுவி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கி உதவுதல்.

 

20 பெப்ரவரி 2015

புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை ( திருத்தம்) சட்ட மூலம் பாராளுமன்றத்தில் விவாத த்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்துடன் நிறைவேற்றப்பட்டது. இது அவசர சட்டமாக எடுத்தக்கொள்ளப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் 34 ஆம் பிரிவு திருத்தப்பட்டது. இதன்படி அட்டைப் பெட்டியின் வெளிப்புறத்தில் புகைத்தல் உடல் நலத்திற்கு ஆபத்தானது எனும் எச்சரிகை பொறிக்கப்படாத அல்லது தார் அல்லது நிக்கொட்டின் உள்ளடக்க அறிக்கையை வெளிப்படுத்துகின்ற துண்டினைக் வெளிப்புறத்தில் கொண்டிராத புகையிலை உற்பத்தி, விற்பனை, இறக்குமதி போன்றவற்றை தடைசெய்தல் ஆகும். உடல்நலம் பற்றிய எச்சரிக்கை சிகரட் பெட்டியின் முகப்பின் 80 வீதாசாரத்திற்கு அச்சிடப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom