இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜன 29 - பெப் 10)

திகதி : 2015-02-13

mace

 

29 சனவரி 2015

2015 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலமான இடைக்கால வரவு செலவுத்திட்டம் கௌரவ நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்களால் 2015 சனவரி மாதம் 29ம் திகதி அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்து. புதிய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமுகமாக 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய சமர்ப்பிக்கப்பட்டது. இந்த இடைக்கால வரவுசெலவுத்திட்டமானது பல்வேறு பொருட்களின் விலைக்குறைப்புகளை உள்ளடக்கிய பல திட்டங்களை கொண்டுள்ளது. நிதியமைச்சர் தனது அறிக்கையில் நிவாரண நடவடிக்கை தொடர்பாக பல திட்டங்களை முன்வைத்தார்.

 

 

5,6,7 பெப்ரவரி 2015

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) (திருத்தப்பட்ட) மீதான இரணடாம் மதிப்பீடு மீதான விவாதம் பெப்ரவரி 5ம் 6ம் மற்றும் 7ம் திகதிகளில் இடம்பெற்றது. 7ம் திகதி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 164 உறுப்பினர்கள் ஆதரவாகவும் ஒரு உறுப்பினர் எதிராக வாக்களித்ததுடன், 10 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

 

 

10 பெப்ரவரி 2015

காலை 9.30 மணி முதல் 6.00 மணி வரை தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் மீதான ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் கெளரவ நிமால் சிறிபால டி சில்வா அவர்கள் இப்பிரேரணையை சபைக்குக் கொண்டுவந்தார். இறுதியில் கெளரவ ஜோன் A. E அமரதுங்க, பொது ஒழுங்கு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் அவர்கள் அரசு சார்பாக பதிலளித்தார்.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom