இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜனவரி மாத முதலாம் அமர்வு வாரம்)

திகதி : 2015-01-23

mace

 

20 சனவரி 2015

புதிய அரசாங்கம் அமையப்பெற்றதனைத்தொடர்ந்து முதலாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக கெளரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களும், சபை முதல்வராக கௌரவ லக்ஸ்மன் கிரியல்ல அவர்களும், அரசாங்க முதற்கோலாசானாக கௌரவ கயந்த கருணாதிலக அவர்களும், எதிர்க்கட்சி முதற்கோலாசானாக கௌரவ டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன அவர்களும் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 

பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தினை முதன்மைப்படுத்தி சிறப்பு அறிக்கையினை வெளியிட்டார். அவர் நாட்டின் நன்மைக்காக கூட்டாக அனைத்துத் தரப்பிரரும் செயற்பட வேண்டும் என வலியறுத்தினார்.

 

எதிர்க்கட்சி தலைவர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா தனது உரையில் அரசின் சாதகமான கொள்கையை செயற்படுத்த எதிர்க்கட்சியின் ஆதரவு நீடிக்கும் எனக்குறிப்பிட்டார்.

 

பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள் புதிய ஜனாதிபதி மற்றும் அரசினையும் வரவேற்கும் வகையில் தமது அறிக்கைகளினை வெளியிட்டார்கள்.

 

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் சபைக்கு வருகை தந்திருந்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom