இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை தருதல்


visit-inquiry-form-ta

 

பொதுவான தகவல்கள்

பொது மக்களில் யாரும் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரிக்கு ஒரு குழுவாகவோ அல்லது தனியாகவோ எந்தவொரு அமர்வு அல்லது அமர்வற்ற நாளிலும் வரமுடியும். வருகைகள் அமர்வற்ற நாட்களில் மு.ப. 9.00 மணிக்கும் பி.ப. 3.30 மணிக்கும் இடையில் 30 (முப்பது) நிமிடங்களுக்கும், எந்தவொரு அமர்வு நாளிலும் அமர்வு முடியும் வரையும் ஒழுங்கு செய்யப்படும்..

 

அமர்வு நேரங்கள்

பாராளுமன்றம் வேறு விதமாகத் தீர்மானித்தாலன்றி, மாதந்தோறும் முதலாவது ஞாயிற்றுக் கிழமையை அடுத்துவரும் வாரத்திலும் ஒன்றுவிட்ட அடுத்த வாரத்திலுமாக இரு வாரங்களில் பாராளுமன்றம் கூட வேண்டும். அத்தகைய முதலாவது, மூன்றாவது வாரங்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பாராளுமன்றம் அமர்தல் வேண்டும். பாராளுமன்றம் வழக்கமாக சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களிலும் கூடுவதில்லை. அத்துடன் வழக்கமாக பாராளுமன்ற அமர்வுகள், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 7.30 மணி வரையிலும், வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 7.30 மணி வரையும் நடைபெறும். சில தினங்களில் பி.ப. 7.30 மணிக்குப் பின்னரும் அமர்வுகள் நீடிக்கப்படலாம். வரவு செலவுத் திட்டக் காலப் பகுதியில், பொதுவாக ஒதுக்கப்பட்ட அமர்வு நேரம் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரையும் பின்னர் பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 7.00 மணி வரையுமாக இருப்பதோடு, காலத்திற்கு காலம் நேர மாற்றங்களுக்கு உட்படலாம்.

 

கலரிகளுக்கு வருகை தருவதற்கான அனுமதி

பொதுமக்கள் கலரிக்கு வருகை தருவதற்குப் படைக்கலச் சேவிதரிடமிருந்து அனுமதி பெறப்படல் வேண்டும். அவ்வாறான வேண்டுகோள்களை பாராளுமன்றத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது விசாரணைப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புவதன் மூலமோ மேற்கொள்ளலாம். உங்களுடைய விசாரணையில் பின்வரும் விபரங்களை நீங்கள் குறிப்பிட வேண்டும்.

 

1. வருபவர்களின் முழுப்பெயர்களும் விலாசங்களும்
   
2. வருபவர்களின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கங்கள்
   
3. வருகை தரும் திகதியும் நேரமும்
   
4. வருகையின் நோக்கம்
   
5. உங்களுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள்
   

 

உங்களுடைய விபரங்கள் முறைவழிப்படுத்தப்பட்டதும், படைக்கலச் சேவிதர் உங்களுடைய வேண்டுகோளை உறுதிப்படுத்த உங்களுடன் தொடர்பு கொண்டு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை உங்களுக்கு விநியோகிப்பார்.

2018-06-19 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom