இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றத்தில் “EvalColombo 2018” அமர்வு

திகதி : 2018-09-20

“EvalColombo 2018” இன் அமர்வொன்று 2018 செப்டெம்பர் 19ஆம் திகதி பாராளுமன்ற குழு அறை இல. 01 இல் இடம்பெற்றது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் 2018 செப்டெம்பர் 17 ஆம் திகதி ஆரம்பமான பாராளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பீட்டுக் ஒன்றியத்தின் 3வது மற்றும் இறுதி நாள் இதுவாகும். இவ்வமர்வின் போது “கொழும்பு பிரகடனம்” சமர்ப்பிக்கப்பட்டது.

 

பிரதிச் சபாநாயகரும் மதிப்பீட்டிற்கான இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தவிசாளருமான கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் வரவேற்புரை ஆற்றப்பட்டது. அதன் பின்னர், இந்த அமர்வின் போது ஒன்று கூடியிருந்தோருக்கு பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் உரையொன்றை நிகழ்த்தினார். அமர்வின் இறுதியில் நன்றியுரையினை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சரும் உலகளாவிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தவிசாளருமான கௌரவ கபீர் ஹஷீம் அவர்கள் ஆற்றினார்.

 

உலகின் பல்வேறு பாகங்களிலுமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வமர்வில் கலந்து கொண்டனர்.

 

1

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom