இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஓய்வு பெறவுள்ள படைக்கல சேவிதரின் சேவை பாராட்டப்பட்டது

திகதி : 2018-08-24

anil-sஇன்னும் சில நாட்களில் ஓய்வு பெறவுள்ள படைக்கல சேவிதர், அனில் பராக்கிரம சமரசேகர அவர்களின் சேவை இன்று பாராளுமன்றத்தில் பாராட்டலுக்கு உள்ளானது. எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை பற்றிய வாக்கெடுப்பின் பின்னர் அவரின் ஓய்வு பெற்றுச் செல்லல் சம்பந்தமாக கௌரவ சபாநாயகர் அவர்களினால் சபைக்கு அறிவிக்கப்பட்டது. அரசாங்கத் தரப்பினர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரின் சேவையைப் பாராட்டி உரையாற்றியதுடன் எதிர்காலத்திற்கும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

சுமார் 22 வருட காலம் பாராளுமன்ற சேவைக் காலத்தைக் கொண்டுள்ள சமரசேகர அவர்கள் படைக்கல சேவிதர் பதவிக்கு நியமிக்கப்பட்டது 2006 மார்ச் மாதம் 22 ஆம் திகதியாகும். 1996 இல் உதவிப் படைக்கல சேவிதராக பாராளுமன்ற சேவையில் இணைந்து கொள்வதற்கு முன்னர், அவர் நியமிக்கப்பட்ட கடற்படை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom