இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

புதிய பிரதி சபாநாயகர் கௌரவ ஆனந்த குமாரசிறி

திகதி : 2018-06-05

ananda-kumarasiri-mpகௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பா.உ. அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அவரின் பெயர் கௌரவ புத்திக பதிரண மற்றும் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க ஆகியோரினால் முறையே முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது. கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பா.உ. அவர்களின் பெயரும் இப்பதவிக்கு முன்மொழியப்பட்டதனால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்தல் இடம்பெற்றது. கௌரவ குமாரசிறி அவர்கள் 97 வாக்குகளையும், கௌரவ பர்னாந்துபுள்ளே 53 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். ஒரு வாக்குச் சீட்டு நிராகரிக்கப்பட்டது.

 

இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் வெற்றிடம் தொடர்பாக கௌரவ சபாநாயகர் அவர்களினால் அறிவித்தல் விடுக்கப்பட்டது. “நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்” முடிவுற்றதன் பின்னர் பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 6 இன் கீழ் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கு பாராளுமன்றம் தொடங்கியது. முன்னாள் சபாநாயகர் கௌரவ திலங்க சுமதிபால அவர்கள் 2018 மே 25ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்தார்.

 

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்கள் மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினாரவதுடன் 1986 ஆம் ஆண்டு முதல் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். இவரது மொத்தமான சட்டவாக்க சேவைக்காலம் சுமார் 9 வருடங்களாகும்.

 

ds-vote

 

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom