இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

“பாராளுமன்ற நடப்பு” தற்போது சமகால உரைபெயர்ப்புடன்

திகதி : 2018-06-05

பாராளுமன்ற நடப்பு” இனை பார்வையிடுகின்ற வண்ணமோ அல்லது கேட்டுக் கொண்டிருக்கும் வண்ணமோ பாராளுமன்ற உரைகளின் சமகால உரைபெயர்ப்பினை கேட்கக்கூடிய வாய்ப்பு தற்போது பாராளுமன்ற இணையத்தளம் மற்றும் தொலைபேசி பயன்பாடு வழங்குகின்றது. பயனாளர்களுக்கு உரையாற்றும் மொழி மற்றும் இணையத்தளத்தின் தெரிவு செய்யப்பட்ட மொழி (சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்) என்பவற்றிடையே நிலைமாற்றிக் கொள்ள முடியும்.

 

1957 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டவாக்கத்திற்கு முதற்தடவையாக சமகால உரைபெயர்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் சட்டவாக்கத்திற்காக இந்த வசதியை அறிமுகப்படுத்திய ஆசிய பிராந்தியத்தின் முதலாவது நாடு இலங்கையாகும். ஆரம்பத்தில், சிங்கள மற்றும் தமிழ் உரைகளை ஆங்கிலத்திற்கு உரைபெயர்ப்பதற்கு வசதியளிக்கப்பட்டது. பின்னர் இந்த வசதியானது நீடிக்கப்பட்டதுடன் உரைபெயர்ப்பானது ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உள்ளது. நிலையியற் கட்டளை இல. 13 இல் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உரைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைமுறைகளை மற்ற இரு மொழிகளுக்கு சமகால உரைபெயர்ப்பு செய்வதற்கான வழிமுறைகளை செய்து கொடுப்பது கௌரவ சபாநாயகர் அவர்களின் பொறுப்பாகும்.

 

இதுவரையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, பாராளுமன்ற செயலக அலுவலர்களுக்கு, ஊடக பணியாளர்களுக்கு, மற்றும் சில கலரிகளில் விருந்தினர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருந்த்தானது தற்போது பொது மக்களுக்கும் வசதியளிக்கப்பட்டுள்ளது.

 

பாராளுமன்ற இணையத்தளம் சபை அமர்வின் நேரடியலையினை 2016 ஜனவரியில் ஆரம்பித்தது. இது 2010 செப்டெம்பர் முதல் நடவடிக்கைமுறையின் பதிவுருத்தப்பட்ட காப்பகத்தைக் கொண்டுள்ளது.

 

to-t

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom