பிணைமுறி ஆணைக்குழுவினதும் பாரிய மோசடி, ஊழல் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவினதும் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டன

திகதி : 2018-01-18

Print

இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழு மற்றும் பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள் 2018 ஜனவரி 17ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டன.

 

அதன் பிற்பாடு, பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, பாராளுமன்ற பிரதி சபாநாயகர் கௌரவ திலங்க சுமதிபால, பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் ஆகியோரின் கலந்து கொள்ளலுடன் சிறப்பு பத்திரிகையாளர் மாநாடொன்று பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்றது.

 

மத்திய வங்கியின் பிணை முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பதிவிறக்குக

பாரிய மோசடி, ஊழல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பதிவிறக்குக

 

1