இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஓமான் தூதுக்குழுவின் பாராளுமன்ற வருகை

திகதி : 2017-12-05

அரச பேரவையின் தலைவர் (சபாநாயகர்) கலாநிதி யெஹ்யா மஹ்பூத் அல் மன்திரீ அவர்களின் தலைமையிலான ஓமான் முடிக்குரிய நாட்டின் தூதுக்குழுவொன்று சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் அழைப்பின் பேரில் இன்று காலை பாராளுமன்றத்திற்கு வந்தது. இந்தத் தூதுக்குழுவில் ஓமான் அரச பேரவையின் உறுப்பினர்களான அப்துல்லாஹ் சயித் அல் சைபி, கலாநிதி திருவதி முனா அஹ்மத் அல் ஸாடூன், கலாநிதி சயித் முபாரக் அல் முஹர்ரமி, கலாநிதி இஸ்மாஈல் ஸாலிஹ் அல் அக்பாரி, திருவதி சபாஹ் பின்த் மொஹமட் அல் பஹ்லானி மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

 

ஓமான் தூதுக்குழுவினருடனான கலந்துரையாடலில் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களுடன் அமைச்சர்களான இரான் விக்கிரமரத்ன, லசந்த அலகியவன்ன, பைஸால் காசிம் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கலந்துரையாடலின் போது, பொருத்தமான தொழில் வாய்ப்புக்களை இலங்கை தொழில்வாண்மையாளர்களுக்கு வழங்குதல், இலங்கையில் வர்த்தக முயற்சிகளுக்கு ஓமான் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தல், சுற்றுலாத் துறை போன்றவைகளில் இலங்கையுடனான கூட்டுறவுகளை ஊக்குவித்தல், இரு நாடுகளுக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பாராளுமன்றங்களுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தல் போன்றன தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியவை பற்றி வலியுறுத்தப்பட்டது.

 

1 2

3

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom