இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சபைகள்

பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கம்

பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கம் (CPA) பேரரசுப் பாராளுமன்றச் சங்கமாக 1911இல் நிறுவப்பட்டது. அவுஸ்திரேலியா, கனடா, நியூபவுண்லாந்து, நியூசீலாந்து, தென்னாபிரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகியன அதன் ஆரம்ப கால உறுப்புக் கிளைகளாகும். பொதுநலவாய அமைப்பு வளர்ச்சி பெற்றதோடு, பொ.பா.ச. அதன் தற்போதைய பெயரை 1948 இல் பெற்றது.

 

பாராளுமன்ற ஜனநாயகத்திற்குப் பங்களிப்புச் செய்யும் பொதுநலவாய நாடுகளிலுள்ள சட்டவாக்கச் சபைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கிளைகளை உறுப்பினர்களாகக் கொண்டு இச்சபை அமைந்துள்ளது. தற்போது இச்சங்கத்தின் தேசிய, மாநில, மாகாண மற்றும் பிராந்திய பாராளுமன்றங்களின் உறுப்பினர் தொகை 164 ஆக உள்ளது.

 

பொதுநலவாய நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி பாராளுமன்ற ஜனநாயகம் பற்றிய அறிவையும் புரிந்துணர்வையும் ஊக்குவிப்பதும் பொதுநலவாய நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பையும் கலந்துரையாடலையும் மேம்படுத்துவதும் பொதுநலவாய பாராளுமன்றச் சங்கத்தின் பணியாகும். பின்வரும் செயற்பாடுகளின் வாயிலாக பொ.பா.ச. அதன் பணியைப் பூர்த்தி செய்கின்றது.

 

மாநாடுகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், பயிற்சி நிகழ்ச்சிகள்
வெளியீடுகள்
தகவல் வழங்குதல்
பாராளுமன்ற விஜயங்கள

 

பொதுநலவாயப் பாராளுமன்ற மாநாடுகள்

இற்றை வரை 53 பொதுநலவாயப் பாராளுமன்ற மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அவற்றுள் இரண்டு 1974ஆம் ஆண்டிலும், 1995ஆம் ஆண்டிலும் இலங்கையில் நடத்தப்பட்டன. பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தில் (இலங்கைக் கிளை) உறுப்புரிமை வேண்டி விண்ணப்பிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உரித்துடையவர்களாவர்.

 

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம்

பாராளுமன்ற உறுப்பினர்களும் சமாதான விரும்பிகளுமான வில்லியம் றெண்டோல் கிறீமர் (ஐஇ.), ஃபிறடறிக் பெஸ்ஸி (பிரான்ஸ்) ஆகிய இருவரின் முன்முயற்சியின் பேரில் 1889இல் அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம் உருவாக்கப்பட்டது. அதுவே தேசியப் பாராளுமன்றங்களின் உலக அமைப்பாகும். தற்போது இவ்வொன்றியம் 140 நாடுகளின் தேசியப் பாராளுமன்றங்களை உறுப்பினர்களாகக் கொண்டமைந்துள்ளது.

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் முக்கிய குறிக்கோளாவது, அரசியல் கலந்துரையாடல்களினூடாகச் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணிப் போற்றுதலும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மதித்தலை ஊக்குவித்தலும் அந்தந்த நாடுகளின் பயனுறுதிமிக்க சட்டவாக்க நிறுவனங்களின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்தலுமாகும்.


அனைத்துப் பாராளுமன்ற மாநாடுகள்

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம் சர்வதேசப் பிரச்சினைகளின் மீதான தனது கருத்துக்களை வெளியிடுவதற்கும் பரிந்துரைகளை மேற்கொள்வதற்குமான பிரதான அமைப்பு இதுவேயாகும். 2008ஆம் ஆண்டு வரை 118 அ.பா.ஒ. மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தில் (இலங்கைக் கிளை) உறுப்பினர்களாவதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தகுதியுடையவர்களாவர்.

 

சார்க் பாராளுமன்றச் சங்கம்

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கமொன்றை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவு 1988 ஏப்பிரலில் கௌத்தமாலாவில் நடைபெற்ற அ.பா.ஒ. மாநாட்டில் முதலில் மேற்கொள்ளப்பட்டது. அதன் முதலாவது கூட்டம் டாக்காவில் 1994 ஜனவரி 28 முதல் 29 வரை நடைபெற்றது. அங்குதான் சார்க் பாராளுமன்றச் சங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்தின் உறுப்பு நாடுகள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் ஆகியவற்றை உள்ளடக்கும்.

 

பாராளுமன்ற மரபுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள், தகவல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கான மன்றமொன்றை அறிமுகஞ் செய்வதன் மூலம் சார்க் நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையேயும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையேயும் தொடர்பையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் முதன்மையான இலக்காகும். சார்க் நாடுகளின் மக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் நட்புறவையும் ஏற்படுத்துவதும் சர்வதேச மன்றங்களில் பொதுவான நலன்களுக்கான விடயங்களில் ஒத்துழைக்கக்கூடியதாக இந்நாடுகளிடையே பிணைப்பை ஸ்திரப்படுத்துவதும் இதன் இரண்டாவது குறிக்கோளாகும். சார்க்கின் பணிகளுக்கு ஆதரவைத் திரட்டிக் கொள்ளுமுகமாகத் தெற்காசியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் தனது கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றிய அறிவையும் இச்சங்கம் மேம்படுத்துகிறது.

சார்க் பாராளுமன்றச் சங்கத்தில் (இலங்கைக் கிளை) உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்கச் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் உரித்துடையவர்களாவர். 

 

மேலும் தகவல்களுக்கும் உறுப்புரிமை விண்ணப்பப் படிவங்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:


திரு. எஸ். ஏ. உபாலி குமாரசிங்க,
பாராளுமன்றப் பிரதான ஒழுங்கு மரபு உத்தியோகத்தர்,
வெளிநாட்டுறவுகள் மற்றும் ஒழுங்கு மரபு அலுவலகம்
4ஆம் மாடி, பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே.
தொலைபேசி: +94 11 2777277 / +94 11 27

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2013-04-17 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom