இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தனி உறுப்பினர் பிரேரணைகள்

தனி உறுப்பினர்களின் பிரேரணை என்றால் என்ன?

பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் முன்மொழிவுகள், பிரேரணைகள் (Motions) எனப்படும். சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களினால் பிரேரிக்கப்படுகின்ற பிரேரணைகள் தனி உறுப்பினர்களின் பிரேரணைகள் என அழைக்கப்படுகின்றன. பொதுமக்களின் அக்கறையொட்டிய எவ்விடயம் பற்றியும் எந்தவொரு பிரேரணையையும், எந்த உறுப்பினரும் பிரேரிக்கலாம். இவ்வகையான பிரேரணைகள் விவாதிக்கப்படலாம் அல்லது வேறெவ்வழியிலேனும் முடிவு காணப்படலாம். "Motions" எனப்படும். சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களினால் பிரேரிக்கப்படுகின்ற பிரேரணைகள் தனி உறுப்பினர்களின் பிரேரணைகள் என அழைக்கப்படுகின்றன. பொதுமக்களின் அக்கறையொட்டிய எவ்விடயம் பற்றியும் எந்தவொரு பிரேரணையையும், எந்த உறுப்பினரும் பிரேரிக்கலாம். இவ்வகையான பிரேரணைகள் விவாதிக்கப்படலாம் அல்லது வேறெவ்வழியிலேனும் முடிவு காணப்படலாம்.


தனி உறுப்பினர்களின் பிரேரணைகளை யார் பிரேரிக்கலாம்?

அரசாங்கத்தில் பதவி வகிக்காத பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வகையான பிரேரணைகளைப் பிரேரிக்கலாம். இவ்வகையான பிரேரணைகளைச் சபாநாயகர், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், முதற்கோலாசான்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோர் பிரேரிக்க முடியாது.


எவ்வகையான விடயப் பரப்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்?

இவை எவ்விடயம் பற்றியதாகவும் இருக்கலாம். மரண தண்டனையை மீண்டும் அறிமுகம் செய்தல், சனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்தல், பால்நிலை பிரச்சினைகள் போன்ற பல்வேறு முக்கிய விடயங்களின் அடிப்படையில் பிரேரணைகள் பிரேரிக்கப்பட்டுள்ளன.


இவை எவ்வாறு விவாதிக்கப்படுகின்றன?

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று இவை பிரேரிக்கப்பட்டு, விவாதிக்கப் படுகின்றன. ஆனால் நம்பிக்கையில்லாத் தீர்மானப் பிரேரணைகள் தனி உறுப்பினரின் பிரேரணைகளாகக் காணப்பட்டபொழுதிலும் கூட இவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப் படுகின்றன. இவை அரசாங்கத்திற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் விவாதிக்கப்படுகின்றன. தனி உறுப்பினரின் பிரேரணைகள் தொண்ணூறு நிமிடங்கள் வரை விவாதிக்கப்படுகின்றன. இவ்விடயத்திற்குப் பொறுப்பான அரசாங்க அமைச்சர், இவ்விடயம் தொடர்பாகத் தனது அவதானிப்புக்களைத் தெரிவிக்கலாம்.


நடைமுறை ஒழுங்கு யாது?

  • பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு அறிவித்தல் வழங்கப்படல் வேண்டும். சபாநாயகர் பிரேரணையை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அது ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும். ஆனால் ஐந்து முழுமையான நாட்கள் பூர்த்தியாகும் வரை இதை விவாதிக்கக்கூடாது.

  • தமது பெயரில் இருக்கும் ஒரு பிரேரணையைப் பிரேரிக்கும்படி அழைக்கப்படுமிடத்து, ஒரு தனி உறுப்பினர் அவ்வாறு பிரேரிக்காது விட்டால், அது காலாவதியாகும். ஆனால் அவர் எழுத்து மூலம் அதிகாரமளித்த இன்னொரு உறுப்பினர் அவருக்காக அப்பிரேரணையைப் பிரேரிக்கலாம்.

  • இப்பிரேரணையை இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் வழிமொழிதல் அவசியமாகும்.

  • ஒரு பிரேரணையைப் பிரேரித்த உறுப்பினர் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அப்பிரேரணையை மீளப் பெறலாம்.


இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2013-02-12 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom