இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒத்திவைப்புப் பிரேரணைகள்

அறிமுகம்

 

"ஓத்திவைப்பு" என்றால், பாராளுமன்றச் சபை அமர்வுகளை, மீண்டும் அடுத்து வருகின்ற ஒரு திகதியில் கூடும் வரை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகும். ஒத்திவைப்பு வேளையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் எழுப்பப்படுகின்ற விடயங்கள், ஒத்திவைப்புப் பிரேரணைகள் என அழைக்கப்படுகின்றன.

 

இது, பொது முக்கியத்துவம் வாய்ந்த, அவசரமான, திட்டவட்டமான விடயமொன்றின் மீது, குறுகிய அறிவித்தலில் சபையின் கவனத்தைக் குவியச் செய்ய, தனியார் உறுப்பினர்கள் பயன்படுத்துகின்ற ஒரு முறையாகும்.

 

ஒத்திவைப்புப் பிரேரணையின் வகைகள்

 

அ. 19 ஆம் நிலையியற் கட்டளையின் கீழான ஒத்திவைப்புப் பிரேரணைகள்.
ஆ. ஒவ்வொரு நாளும், ஒத்திவைப்புப் பிரேரணைக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒரு மணித்தியால ஒத்திவைப்பு வேளையில் பிரேரிக்கப்படக்கூடிய, ஒத்திவைப்புப் பிரேரணை.
இ. பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் இணக்கப்பாட்டுடனான பிரேரணைகள்.

 

19 ஆம் நிலையியற் கட்டளையின் கீழ் ஒத்திவைப்புப் பிரேரணைக்கான ஒழுங்கு முறை

 

இவ்வாறான பிரேரணையைப் பிரேரிக்க விரும்பும் உறுப்பினர், சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்து, அவரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அனுமதி பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட உறுப்பினர் கேள்வி நேரத்தின் பின், பிரேரணையைப் பிரேரித்து, சபையின் அனுமதியையும் பெற்றுக்கொள்ளலாம். அனுமதி கிடைக்காத பட்சத்தில், பிரேரணைக்கு ஆதரவாக இருபது உறுப்பினர்கள் எழுந்து நின்றால் போதுமானதாகும். பிரேரணை அவ்வாறு ஆதரிக்கப்பட்டால் அல்லது அதற்கு அனுமதி வழங்கப்பட்டால், பி.ப. 2.30 மணிக்கு விவாதம் ஆரம்பிக்கும் வரை அது ஒத்தி வைக்கப்படும்.

உத்தேசிக்கப்பட்ட ஒத்திவைப்புப் பிரேரணைக்கு, சபாநாயகர் அனுமதி வழங்க மறுக்குமிடத்து, உறுப்பினர் விடயத்தினை எழுப்புவதற்கு மட்டும் அனுமதி வழங்கி அதற்கு அவர் இணங்க மறுத்தமைக்கான காரணங்களைச் சபாநாயகர் குறிப்பிடலாம்.

ஒரு புதிய ஏற்பாடாக, உறுப்பினர்கள் ஒத்திவைப்பு விவாதத்திற்கான அவர்களின் பிரேரணையை, அவர்களின் கட்சிப் பிரதிநிதிகள் ஊடாகப் பாராளுமன்ற அலுவல்கள் குழுவுக்குச் சமர்ப்பித்து, பிரேரணைக்கான அங்கீகாரத்தினைப் பெற வேண்டும். குழுவினால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதும், விவாதத்திற்கான ஒரு திகதி குறிக்கப்படலாம். அதன் பிறகு பிரேரணையானது மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படாமலே எடுத்துக் கொள்ளப்படலாம். எவ்வாறாயினும், ஒரு நாளில் ஒரு பிரேரணை மாத்திரமே பிரேரிக்கப்படலாம்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2018-04-23 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom