ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2017-08-15

Print

2017, ஆகஸ்ட் 10 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2017 ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 117 - நிகழ்ச்சித்திட்டம் 02 (உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்)
(இது 2017.08.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது பற்றிய பிரேரணை 2017.08.11 அன்று வெளியிடப்பட்ட 7ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
(ii) ஆட்களைப் பதிவு செய்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி

(இவ்வொழுங்குவிதிகள் 2017.08.10 ஆம் திகதிய 188ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 மற்றும் 5ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 

2017 ஆகஸ்ட் 23 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 நாட்டின் சில மாவட்டங்களில் நிலவும் வறட்சி நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு)
 

2017 ஆகஸ்ட் 24 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2017.08.10 ஆம் திகதிய 188ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 

2017 ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 07.30 (i) உண்ணாட்டரசிறைச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2017.08.10 ஆம் திகதிய 188ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(2017.02.21ஆம் திகதிய 2007/24ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள இந்த கட்டளை 2017.08.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இது பற்றிய பிரேரணை 2017.08.11 அன்று வெளியிடப்பட்ட 7ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)