இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

படைக்கலச் சேவிதரின் அலுவலகம்

பணி


சபாநாயகருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் பணியாட்டொகுதியினருக்கும் பராளுமன்ற பணியாட்டொகுதியினருக்கும் துணைநிலைப் பணியாட்டொகுதியினருக்கும் உரிய நேரத்தில் வினைத்திறன்மிக்க சாத்தியமான உயர்தர சேவைகளை வழங்குவதன் மூலம் பாராளுமன்ற சபையின் பயனுறுதியான செயல்பாட்டுக்கு வசதியளித்தல்.

 

இலங்கையில் படைக்கலச் சேவிதர் அலுவலகம், அதன் வரலாறு

 • செங்கோல் ஒன்றை வழங்கி படைக்கலச் சேவிதர் ஒருவரை நியமிப்பதன் தேவை அன்றிருந்த இலங்கைப் பாராளுமன்றத்தினால் 1931 ஜூலை 20 ஆந் திகதி முதல் தடவையாக கருத்தில் கொள்ளப்பட்டது.
 • திருவாளர்களான அன்றிருந்த சபாநாயகர் சேர் பிரான்சிஸ் மொலமுரே, சுசந்த த பொன்சோகா, மேஜர் ஜே. டபிள்யூ. ஓல்ட்பீட், MBE: டாக்டர் வீ.ஆர். சொக்மன், டி.டி. அதுலத்முதலி மற்றும் அன்றிருந்த அரச கழகத்தின் சபையின் செயலாளரான ஜீ.என். பர்கார் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழு இந்த விடயங்களை கருத்தில் கொண்டது.
 • கலரிகளுக்கு விஜயம் செய்வோரை அனுமதிக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளடங்கலாக படைக்கலச் சேவிதர் மற்றும் அவரின் பணியாட்டொகுதியினரின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகளையும் ஏனைய வேறு சில விடயங்களையும் 1933 மார்ச் மாதம் அரச கழகம் கருத்தில் கொண்டது.
 • அரசியலமைப்பின் 65(3) ஆம் உறுப்புரையின் கீழ் படைக்கலச் சேவிதர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தினால் கெளரவ சபாநாயகரின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்படுகிறார்.
 • முதலாவது படைக்சலச் சேவிதர் 1947 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதுடன் பிரித்தானிய பாராளுமன்றத்தின் பொது மக்கள் சபையால் 1949 ஆம் ஆண்டு செங்கோல் வழங்கப்பட்டது. திரு. எம். இஸ்மாயில், MBE முதலாவது படைக்கலக் சேவிதராக இருந்ததுடன் அவர் 1947 முதல் 1961 வரை இப்பதவியை வகித்தார். அதற்குப் பின்னர் கீழ்வருபவர்கள் இப்பதவியில் பின்தொடர்ந்தார்கள் :-
  திரு. ஜே.ஆர். த சில்வா - 1961 முதல் 1970 வரை
  திரு. ரொனீ அபேசிங்க - 1970 முதல் 1996 வரை
  திரு. விஜய பள்ளியகுருகே - 1996 முதல் 2006 வரை
  திரு. அனில் பராக்கிரம சமரசேகர - 2006 முதல் 2018
  திரு. நரேந்திர பெர்னாந்து - 2018 முதல் இன்றுவரை

 • பாராளுமன்ற அதிகாரத்தின் சின்னமாகிய செங்கோலின் பாதுகாவலர் படைக்கலச் சேவிதர் ஆவார். சபையினுள் தலைமை வகிப்பவரால் இடப்படும் கட்டளைகளை நிறைவேற்றும் அலுவலராகவும் அவர் இருக்கிறார்.
 • தலைமை தாங்குபவரின் அதிகாரத்துக்கு அடிபணியாமைக்காகவோ அல்லது அதை அவமதித்ததற்காகவோ அல்லது வேண்டுமென்றே பாராளுமன்ற நடவடிக்கைகளைத் திரும்பத் திரும்ப இடைமறிப்பு செய்ததற்காகவோ அல்லது பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியதற்காகவோ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கோ அல்லது உரிய உறுப்பினரை சபாகூடத்தில் இருந்து வெளியேற்றுவதற்கோ தலைமை தாங்குபவரால் இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்கு படைக்கலச் சேவிதர் அதிகாரமளிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் 77 முதல் 81 வரையான நிலையியற் கட்டளைகள் நடைமுறைக்கு வரும்.
 • ஏதேனும் சாட்சி, குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது வேறெவரேனுமாள் சபையின் தடை எல்லைக்கு முன்னால் அழைக்கப்படும்போது அத்தகைய ஆளை சபையின் தடை எல்லைக்கு அழைத்துச் செல்ல படைக்கலச் சேவிதர் அதிகாரமளிக்கப்பட்டுள்ளார்.
 • அமர்வுத் தினமொன்றில் பராளுமன்ற வளாகத்தினுள் அல்லது கட்டிடத்தினுள் ஒழுக்கமற்ற முறையில் நடந்துள்ளார் அல்லது கட்டிடத்தினுள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார் அல்லது குழப்பம் விளைவித்துள்ளார் அல்லது அடுத்தவர்களுக்கு அவ்வாறு செய்ய ஆதரவளித்துள்ளார் என்பதற்காக குற்றவாளியாக்கப்பட்டிருக்கும் எந்த ஆளையும் பிடியாணை இன்றி சபாநாயகரின் எழுத்து மூல அல்லது வாய்மூல கட்டளைக்கிணங்க கைது செய்வதற்கும் பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம் மற்றும் நிலையியற் கட்டளைகளின் கீழ் பாராளுமன்றம் அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமா இல்லையா என தீர்மானிக்கும் வரையான அத்தகைய காலத்துக்கு பாதுகாப்பான தடுப்புக் காவலில் அவரை வைத்திருக்கவும் படைக்கலச் சேவிதருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
 • கைது செய்யப்பட்ட அவ்வாறான ஆட்களைக் கையளித்தல் உட்பட சபாநாயகரால் வழங்கப்படும் கட்டளை மீதான செயன்முறைகளை படைக்கலச் சேவிதர் அவர்களே நிர்வகிக்கிறார்.
 • சபையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒரு விடயத்தை எழுப்பும்பொழுது, எவ்விடயமாயினும் அதனை உடனடியாக கவனத்தில் கொள்ளுமாறு படைக்கலச் சேவிதர் பணிக்கப்படுவதுடன், அது மீதான நடுநிலையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கும் அவர் கட்டுப்படுகிறார்.
 • உரிய முறையிலன்றி உடை அணிந்து சபைக்குள் நுழையும் எந்த பாராளுமன்ற உறுப்பினரையும் (அங்கீகரிக்கப்பட்ட உடை இல்லாதுவிடின்) உடனடியாக சபையில் இருந்து வெளியேறும்படி வேண்டுகோள் விடுப்பதற்கு படைக்கலச் சேவிதர் அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
 • தனது கடமைகளை செயற்படுத்துவதில் படைக்கலச் சேவிதர் சபையில் பிரதான கதவுக்கு அண்மையாக ஒரு விசேட இடத்தை பெற்றுக்கொள்கிறார்.
 • படைக்கலச் சேவிதர் மாத்திரமே அவரது சம்பிரதாய உடையின் ஒரு பாகமாகிய ஓர் ஆயுதத்தை (வாள்) சபைக்குள் எடுத்துச் செல்லக்கூடியவராக இருக்கிறார்.
 • படைக்கலச் சேவிதர், பொதுநலவாய பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் சங்கத்தின் ஓர் உறுப்பினராக இருப்பதுடன், பாராளுமன்ற முகாமைத்துவத்தின் நவீன விருத்திகளுடன் பழக்கப்படுத்திக்கொள்ளும் முகமாக அதன் அமர்வுகளுக்கு சமுகமளிக்கிறார்.
 • சபையின் சிறப்புரிமைகளின் காவலனாக உள்ள கெளரவ சபாநாயகரால் வழங்கப்படும் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு சட்டரீதியாக அதிகாரமளிக்கப்பட்ட பிரதான அமுல்படுத்துநராக படைக்கலச் சேவிதர் உள்ளார்.
 • படைக்கலச் சேவிதரின் நியமனம் மற்றும் ஓய்வுபெறுகை என்பன சம்பிரதாயமாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுகிறது. சேவைநலன் பாராட்டுவதற்கான பிரேரணைக்காக திகதி ஒதுக்கப்படுவதுடன், அது சபையில் படைக்கலச் சேவிதர் ஓய்வுபெறும் காலத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
 • படைக்கலச் சேவிதரின் திணைக்களமானது பாராளுமன்றத்தில் மிக முக்கிய திணைக்களங்களுள் ஒன்றாக இருப்பதுடன், இது இரண்டாவது மிகப் பழைய திணைக்களமாக இருக்க, முதலாவதாக பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகம் உள்ளது.
 • படைக்கலச் சேவிதரின் தற்போதைய கடமைகளை பெரும்பாலும் சபை அலுவல்களின் மத்தியில் நிர்வாகம் சார்ந்ததாக விபரிக்க முடியும்.
 • சபையின் சாதாரண அமர்வுத் தினங்களின்பொழுது படைக்கலச் சேவிதர் வெள்ளை நிற சீருடையை அணிந்திருப்பதுடன், சம்பிரதாய வைபவங்களின்போது விசேடமாக வடிவமைக்கப்பட்ட கறுப்பு நிற வைபவ ரீதியான உடையில் இருப்பார். (இராணுவ மேஜர் ஜெனரல் தரத்திற்கு சமதையானது. )
 • படைக்கலச் சேவிதரின் தொழிற்பாடுகளுள் உள்ளடங்குவனவாக வைபவங்கள், சபை, பாதுகாப்பு, வருகை தருநர்கள் நிர்வாகம், தங்குமிடம், திணைக்கள ரீதியானவை என்பன உள்ளடங்குகின்றன.
 • தற்போதைய படைக்கலச் சேவிதர் திரு. நரேந்திர பெர்னாந்து ஆவார். இந்தப் பதவியுடன் தொடர்பான கடமைகளையும் பணிகளையும் நிறைவேற்றுவதற்கு பிரதிப் படைக்கலச் சேவிதர் திரு. குஷான் ஜயரத்ன உதவியளிக்கின்றார்.


குறிக்கோள்கள்


வைபவரீதியானவை

 • பாராளுமன்றம் மற்றும் சபாநாயகரின் வைபவரீதியான நிகழ்வுகள்/ செயற்பாடுகள் ஆகியவற்றை பொருத்தமான தராதரத்துக்கு அமைய ஒழுங்கு செய்தல். (அரச மரியாதையுடனான இறுதிச் சடங்குகளின்போது பார்வைக்கு வைத்திருத்தல் தொடர்பான செயற்பாடுகள் உள்ளடங்கலாக)

 

சபாகூடம்

 • பாராளுமன்றத்தின் அதிகாரத் தத்துவத்தை எடுத்தியம்புகின்ற "செங்கோலின்" பொறுப்பாளராகவும் பாதுகாவலனாகவும் விளங்குதல்.
 • சபையின் நிறைவேற்று அதிகாரம் மிக்கவர் என்ற ரீதியில் சபாநாயகர் படைக்கலச் சேவிதரை நிறைவேற்றுமாறு பணிக்கின்ற பணிகளை நிறைவேற்றுதல்.
 • பாராளுமன்ற சபையும் குழுக்களும் வினைத்திறனுடன் செயற்படுவதை மேம்படுத்துவதற்கு அவசியமான பணியாளர்களும் வசதிகளும் இருப்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் சட்டவாக்க செயன்முறைக்கு உயர்தரத்திலானதும் நேரடியானதுமான உதவியினை வழங்குதல்.

 

பாதுகாப்பு

 • பாராளுமன்றத்தில் பணியாற்றுபவர்களுக்கும் பாராளுமன்றக் கட்டடத்தொகுதிக்கு விஜயம் செய்பவர்களுக்கும் வன்முறை, விபத்து மற்றும் தீ அபாயங்களை முகாமைத்துவம் செய்தலை மற்றும் இழிவளவாக்குதலை உறுதிப்படுத்துவதன் மூலம் பாராளுமன்றக் கட்டடத்தொகுதி முழுவதும் பாதுகாப்பானதும் பத்திரமானதுமான சூழல் மற்றும் உட்கட்டமைப்பை வழங்குதல்.
 • பாராளுமன்ற பொலிஸ் பிரிவுடன் இணைந்து பாராளுமன்றம் மற்றும் அதன் வளவெல்லையின் பெளதீக பாதுகாப்பை வினைத்திறனுடனும் பயனுறுதிமிக்கதுமாகப் பேணுதலும் பாராளுமன்ற வளவெல்லையினுள் உறுப்பினர்கள், பணியாட்டொகுதியினர் மற்றும் விஜயம் செய்வோர் ஆகியோருக்கான பாதுகாப்பு தொடர்பாக சபாநாயகருக்கும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கும் பயனுள்ள ஆலோசனையை வழங்குதலும்.
 • பாராளுமன்ற வளவினுள் ஒழுங்கினைப் பேணுதல்.
 • பாராளுமன்ற கட்டடத் தொகுதியின் உயர் பாதுகாப்பு வயலத்திற்குச் சுற்றி கட்டங்களை நிர்மாணிப்பதற்கு பாதுகாப்பு அனுமதியினை வழங்குவதற்கு பொருத்தமான பாதுகாப்பு பரிசீலனைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துதல்.
 • பாராளுமன்றப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளருடன் இணைந்து பின்வருவன உள்ளிட்ட பாராளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை கூட்டாக நிர்வகித்தல்.
  • அணுகல் கட்டுப்பாடு
  • பாதுகாப்புப் பரிசீலனை
  • பதில் நடவடிக்கை ஆற்றலைப் பேணுதல்
  • தொழில்நுட்ப பாதுகாப்பு
  • முப்படைகளுடனும் பொலிசாருடனும் புலனாய்வு முகவர்களுடனும் இணைந்து பணியாற்றுதல்.
  • விசேடமாக்கப்பட்டுள்ள வளங்களை ஒருங்கிணைத்தல்
  • வெளிநாட்டு அதிதிகள் சம்பந்தப்படும் பிரதான நிகழ்வுகளைத் திட்டமிடல் ; மற்றும்
  • விசேட வகை அச்சுறுத்தல்கள் பற்றித் திட்டமிடுதல்.

விஜயம் செய்பவர்களை நிர்வகித்தல்.

 • பாராளுமன்ற கட்டிடத்தொகுதியினுள் நபர்களை அனுமதிப்பதை கட்டுப்படுத்துவதும் ஒழுங்குபடுத்துவதும்.
 • பாராளுமன்றத்தை பார்வையிட வரும் பாடசாலைகள் மற்றும் விஜயம் செய்வோருக்கு வசதியளித்தல்.

இட வசதி

 •  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதில் பணியாற்றும் அனைவருக்கும் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்பவர்களுக்கும் தரமான சூழல் மற்றும் உட்கட்டமைப்பினை வழங்குவதன் மூலம் பணியாற்றுவதற்கும் விஜயம் செய்வதற்கும் பாரளுமன்றக் கட்டடத்தொகுதி ஒரு சிறந்த இடம் என்பதை உறுதிப்படுத்துதல்.
 • குழு மற்றும் நேர்காணல் அறைகள் உள்ளடங்கலாக பாராளுமன்றக் கட்டடம் முழுவதும் இட வசதிகளை ஒதுக்குவது தொடர்பாக ஆலேசானை வழங்குவதும் அதனை நிர்வகித்தலும்.

திணைக்களம்

 • உபாயகரமான தலைமைத்துவத்தினை வழங்குதல் மற்றும் திணைக்கள வளங்களின் ஒட்டுமொத்த முகாமைத்துவம் எனும் வகிபாத்திரத்திற்கு அமைய நிறுவனத் தலைவருக்கு பயனுறுதியானதும் வினைத்திறன் மிக்கதுமான ஆதரவுச் சேவையை வழங்குதல்.
 • பாராளுமன்றத்தில் பணியாற்றுபவர்களுக்கும் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்பவர்களுக்கும் பொருத்தப்பாடுமிக்கதும் அணுகக்கூடியதுமான ஏற்றுக்கொள்ளப்பட்ட தராதரங்களுக்கு அமைய உயர்தரத்திலான வாடிக்கையாளர்/ தொலைபேசி சேவைகளை வழங்குதல்.
தொடர்பு கொள்க
   
டப்ளியூ.என்.எம். ப்ரனாந்து
narendra_f@parliament.lk

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom