இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றச் செயலாளர் நாயகம்

பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தின் பிரதம நிறைவேற்று அலுவலராவார். அவர் பாராளுமன்றப் பேரவையின் இணக்கத்துடன், ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார். பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பதவி, அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு பதவியாகும். பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பிரதான பணிகளில் ஒன்று, பாராளுமன்ற நடவடிக்கை முறை, சட்டமூலங்கள் அரசியலமைப்புக்கு இயைபாகவிருத்தல், நிலையியற் கட்டளைகள், சிறப்புரிமைகள் ஆகியன தொடர்பான விடயங்களிலும், பாராளுமன்ற நடவடிக்கை பற்றிய வேறு ஏதேனும் விடயங்களிலும் சபாநாயகர் மற்றும் ஏனைய தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு, ஆலோசனை வழங்குதலாகும். பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அவரது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குப் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகமும் உதவுவர். செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தின் பிரதம நிருவாகத்தரும் கணக்கீட்டு அலுவலருமாவார். பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாளர்கள் சபாநாயகரின் அங்கீகாரத்துடன் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்படுவர். செயலாளர் நாயகம் அல்லது அவரின் நியமத்தர் பாராளுமன்றத்தினால் தாபிக்கப்படும் எல்லாக் குழுக்களுக்கும் செயலாளராகப் பணியாற்றுவார்.

 

தற்போதைய பாராளுமன்ற செயலாளர் நாயகம் பற்றி

2012 இல் பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவியை அடையும் தம்மிக தஸநாயக்க, 1994 இல் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகமாக தனது பாராளுமன்ற பணியைத் தொடங்கியதோடு 2003 இல் பிரதி செயலாளர் நாயகமாக உயர்வு பெற்றார்.

தம்மிக தஸாநாயக்க அவர்கள் கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க வித்தியாலயம் மற்றும் றோயல் கல்லூரிகளில் கல்வி கற்றுள்ளார். அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது எல்எல்.பி மற்றும் எல்எல்.எம் களை நிறைவு செய்துள்ளார். 1988 இல் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஒரு சட்ட வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட இவர் பிறகு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக சட்ட ஆலோசகராக (ஆராய்ச்சி) நியமிக்கப்பட்டார்.

1989 ஆம் ஆண்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச வழக்குறைஞராக சேர்ந்து கொண்ட இவர், காலி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, சிலாபம், பாணந்துறை, நீர்கொழும்பு மற்றும் அவிஸ்ஸாவல போன்ற பல உயர் நீதிமன்றங்களில் அரச பிரதிவாதியாக தோன்றியுள்ளார். மேலும் அவர் அரச சார்பில் பல அடிப்படை உரிமைகள் மனுக்கள் மற்றும் 'ரிட்' மனு தாக்கல்களில் தோன்றியுள்ளார். அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக தொழிலாளர் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் முன்னாள் வருகைதரு விரிவுரையாளராகவும் இருந்துள்ளார்.

திரு. தஸாநாயக்க அவர்கள் பல, அனைத்துப் பாராளுமன்ற ஒன்றிய (IPU), பொதுநலவாய பாராளுமன்றச் சங்க (CPA), சார்க் பாராளுமன்ற சங்க மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளதோடு, 2010 முதல் 2012 வரை பொதுநலவாய பாராளுமன்றச் சங்கத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பிராந்திய செயலாளராகவும் இருந்துள்ளார். அவர் பாராளுமன்ற கெளரவ சபாநாயகர் அவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் பல இருதரப்பு பாராளுமன்ற விஜயங்களில் கலந்து கொண்டுள்ளார். திரு. தஸாநாயக்க அவர்களுக்கு நாடாளுமன்ற ஆளுகை துறையில் 2000 ஆம் ஆண்டு பொதுநலவாய மன்றத்தினால் பொதுநலவாய புலமையாளர் சிறப்பு விருது வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு திரு. தஸாநாயக்க அவர்கள் ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் "தேவை மதிப்பீட்டு விடயம்" மேற்கொள்வதற்கு அனைத்து பாராளுமன்ற ஒன்றிய மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற நிபுணர் குழாமை தலைமை தாங்கி வழி நடாத்துவதற்கு அழைக்கப்பட்டார். இந்த குழாம் ஆப்கானிஸ்தான் புதிய பாராளுமன்றத்தில் கட்டமைப்பு, நிருவாக ஒழுங்கு மற்றும் சட்டங்கள், நிலையியற் கட்டளைகள் போன்றவற்றை வகுப்பதில் முக்கிய பங்காற்றியது. அவர் மேலும் ஆப்கானிஸ்தான் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதன பணியாற்றொகுதியினருக்கு பயிற்சி செயலமர்வுகளை நடாத்துவதற்கும் அழைக்கப்பட்டார். 2006, லாவோஸ் குடியரசின் பாராளுமன்ற மனுக்கள் குழுவை அமைப்பதற்கான நிபுணத்துவத்தை வழங்குவதற்கு திரு. தஸநாயக்க அவர்கள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் அழைக்கப்பட்டார். அவர் மேலும், பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் சர்வதேச பாராளுமன்ற வளவாளர் ஒருவராக இருந்து பணியாற்றொகுதியினருக்கான பயிற்சிகைளை பல பொதுநலவாய நாடுகளில் நடாத்தியுள்ளார்.

திருமணமாகி மூன்று குழந்தைகள் உடைய இவர் வாசிப்பு மற்றும் புகைப்படம் பிடிப்பது இவரது பொழுதுபோக்குகளாகும்.

 

முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகங்கள்

திரு. ஆர். செயின்ட் எல். பி. தெரணியகல (1947 - 1964)
திரு. எஸ். எஸ். விஜேசிங்ஹ (1964 - 1981)
திரு. எஸ். எஸ். செனவிரத்ன (1981 - 1994)
திரு. (B)பேர்ட்றம் தித்தவெல்ல (1994 - 1999)
திரு. தம்மிக்க கித்துல்கொட (1999 - 2002; 2008 - 2012)
திருமதி பிரியாணி விஜேசேகர (2002 - 2008)

 

தொடர்பு கொள்க
   
டப்ளியு.பி.டி. தஸநாயக்க
dhammika_d@parliament.lk

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom