இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள்

குழுவில் சேவையாற்ற விருப்பமற்ற எந்த உறுப்பினரும் குழுவில் நியமிக்கப்பட் மாட்டார். குழுக்களில் உறுப்பினர்களை நியமிக்க முன்பதாக, முதற்கோலாசானுடனும், கட்சிகளின் தலைவர்களுடனும் ஆலோசனை நடாத்தப்படும். தெரிவுக் குழுவானது, உதாரணமாக பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் விகிதாசாரத்திற்கேற்பவே பல்வேறு குழுக்களினதும் உறுப்பினர்களை நியமிக்கும்.

ஒவ்வொரு குழுவிலும் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையும் வேறுபடும். பெரும்பாலான நிலையியற் குழுக்கள் இருபது உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். நிலையியல் கட்டளைகள் பற்றிய குழுவிலே ஆகக் குறைந்தது ஒன்பது உறுப்பினர்கள் இருப்பார்கள்.

குழுவின் தலைமைத்துவமானது சாதாரணமாக அதிகாரத்தில் உள்ள கட்சியின் உறுப்பினருக்குச் சொந்தமாகும். சபைக்குழு, நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு என்பனவற்றின் தவிசாளராக சபாநாயகர் இருப்பார்.

விசேட நோக்கங்களுக்கான ஏனைய குழுக்களின் தவிசாளர்கள் குழு உறுப்பினர்களிடையே தெரியப்படுவார்கள். தெரிவுக் குழுக்களின் தவிசாளர் சபாநாயகரால் நியமிக்கப்படுவார்.

குழுக் கூட்டத்தின் கூட்ட நடப்பெண் அண்ணளவாக மொத்த உறுப்பினர் எண்ணிக்கையின் மூன்றில் ஒன்றாக இருக்கலாமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பாராளுமன்றமானது, நன்கு வடிவமைக்கப்பட்டதும், ஒரு சீரான சட்டத் தொகுதியின் கீழ் இயங்குவதுமான ஒரு குழு முறைமையை வகுத்துள்ளது. இக்குழுக்களானவை பாராளுமன்றச் சபை அமர்வு நேரத்தை உண்மையிலேயே மீதப்படுத்துவதோடு, இலங்கைப் பாராளுமன்றச் சனநாயகத்தின் பயனுறுதி மிக்க தொழிற்பாட்டுக்கும் குறிப்பான பங்கை வழங்குகின்றன.

குழுத் தவிசாளரின் ஆளுமையிலேயே, குழுக்களின் பயனுறுதித்தன்மை பெரிதும் தங்கியுள்ளது. குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள தவிசாளர் விரும்பின், அவ்வாறு அவர் செயற்பட வழிகளும் வகைகளும் உள்ளன. உறுப்பினர்களிடையே கடமைப் பொறுப்பை ஏற்படுத்த அவர் சில உப குழுக்களை நியமித்து சில உறுப்பினர்களை அவ் உப குழுக்களின் தவிசாளராக்கலாம்.

குழுக்கள் அனைத்திலும், எப்போதும் அவற்றின் பணிகளில் விஷேட ஆர்வங் காட்டுகின்ற தொரு குழு இருக்கும். குழுப்பணிகளில் உண்மையாகவே ஆர்வங்காட்டுகின்ற, ஒழுங்காக கூட்டங்களுக்குச் சமூகமளிக்கின்ற உறுப்பினர்கள் இவர்களேயாவர். இக்காரணி கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், குழு ஒழுங்காக விருத்தி செய்யப்படின், குழுவின் பயனுறுதி மிக்க செயற்பாட்டிற்கு அது அநுகூலமாய் அமையும்.

பிரித்தானிய முறையிலிருந்து தோன்றியதாயினும், இலங்கையில் நிலவும் குழு முறைமையானது, இலங்கைப் பாராளுமன்றத்திலும் சமூகத்திலும் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப அதன் தன்மைகளில் மாற்றம் பெற்றுள்ளது. குழுக்கள் கூடிய அதிகாரங்களைப் பெற்றுள்ளதோடு, விரிவான நியாயாதிக்கத்தையும் கொண்டுள்ளன. அதேவேளை, பாராளுமன்றத்தின் நாளாந்த அலுவல்களுக்கு அவை பாரிய பெறுமதி மிக்க பங்களிப்பை வழங்கியுள்ளன.

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom