இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கையில் இன மற்றும் மத நல்லிணக்கம் பற்றிய பாராளுமன்ற தெரிகுழுவின் இரண்டாவது பிராந்திய மாநாடு

திகதி : 2018-10-09

கௌரவ பாராளுமன்றச் சபாநாயகரின் தலைமையில் சங்கைக்குரிய மகா நாயக்க தேரர், துணை நாயக்க தேரர்கள், அனைத்து மதங்களையும் சேர்ந்த மதிப்புக்குரிய மதத் தலைவர்கள், கௌரவ அமைச்சர்கள், அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய அரசாங்க அலுவலர்கள் மற்றும் இலங்கை ஆதிக்குடிகளின் தலைவர்கள் ஆகியவர்களின் பங்குபற்றுதலுடன் 2018 ஒக்டோபர் 01 ஆந் திகதி மு.ப. 9.30 தொடக்கம் பி.ப. 2.00 மணி வரை அம்பாரை மொன்டி (Monty) ஹோட்டலில் நடைபெற்ற இலங்கையில் இன மற்றும் மத நல்லிணக்கம் பற்றிய பாராளுமன்ற தெரிகுழுவின் இரண்டாவது பிராந்திய மாநாடு வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

 

“இலங்கையின் நிலைபேறான தன்மைக்காக தேசிய மற்றும் மத நல்லிணக்கம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டின் போது இலங்கையில் இன மற்றும் மத நல்லிணக்கம் பற்றிய பல் வேறுபட்ட முக்கியமான தலைப்புகள் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன.

 

பாராளுமன்ற தெரிகுழுவொன்றாக இலங்கையில் இன மற்றும் மத நல்லிணக்கம் பற்றிய பாராளுமன்றக் குழு தாபிக்கப்பட்டதன் பின்னர் நடாத்தப்பட்ட முதலாவது பிராந்திய மாநாடு இதுவாகும்.

 

மூன்றாவது பிராந்திய மாநாடு 2019 சனவரி 21 ஆந் திகதி மு.ப. 9.30 தொடக்கம் பி.ப. 2.30 மணி வரை காலி நகரில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

1 2

3 4

5 6

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom