இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற மகளிர் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் கொள்கை உரையாடல்கள் தொடர்

திகதி : 2018-05-09

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா நாடுகள் முகவர் நிறுவனம் (USAID) இன் ஜனநாயக ஆட்சி மற்றும் பொறுப்புத்திறன் திட்டத்தை பலப்படுத்துதல் செயற்றிட்டத்தின் அனுசரணையுடன் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் கொள்கை பற்றிய தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் அமர்வு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும் ஒன்றியத்தின் தவிசாளருமான கெளரவ (திருமதி) சந்திராணி பண்டார அவர்களின் தலைமையில் மே மாதம் 10 ஆம் திகதி, வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் 12.3 0 மணி வரை பாராளுமன்றத்தின் 2 ஆவது குழு அறையில் நடைபெறும்.

 

உள்ளுராட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 25% ஆசனங்களை ஒதுக்குவதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள், 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை (திருத்தம்) சட்டத்தை ஊக்குவிப்பதற்கான சிபாரிசுகளை முன்வைத்தல் மற்றும் அண்மைக்கால உள்ளுராட்சி தேர்தல்களின் அனுபவங்களின் வாயிலாக பெண் அரசியல்வாதிகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி இங்கு கலதுரையாடப்படும்.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom