இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிகுழுவின் இரண்டாவது கூட்டம்

திகதி : 2017-01-26

நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிகுழுவின் இரண்டாவது கூட்டம் 2017 ஜனவரி 25, புதன்கிழமை குழு அறை இல. 02 இல் இடம்பெற்றது.

 

குழுவின் தவிசாளர் என்ற வகையில் இலங்கை பாராளுமன்ற பிரதிச் சபாநாயகர் கௌரவ திலங்க சுமதிபால அவர்கள் நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகள் 17 அடிப்படை அம்சங்களை 5ஆக பிரிப்பதற்கு பிரேரித்தார். தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் இந்நாட்டிற்கு தேவையான நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளுக்கான குறியீடுகளை அடையாளம் காண்பதற்கான கட்டமைப்பை அமைப்பதில் ஈடுபடவுள்ளனர்.

 

நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகள் 17 சம்பந்தமாக தேசிய, மாகாண, மாவட்ட, பிரதேச செயலக வலய மற்றும் கிராம உத்தியோகத்தர் மட்டங்களில் இந்நாட்டின் நிலைமைகளை மதிப்பிடுவதற்கும் மற்றும் இந்நாட்டு தேசிய மட்டம், ஆசிய மற்றும் உலகளாவிய நிலைமைகளுடன் ஒப்பிடுவதற்கு, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு மற்றும் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரிகளை உள்ளடக்கிய செயற்குழுவொன்றை குழு நியமித்தது.

 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவு பரிமாற்ற தொடரொன்றை நடாத்துவதற்கு குழுவானது முடிவு செய்தது.

 

குழு உறுப்பினர்களான கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன் மற்றும் கௌரவ அநுராத ஜயரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom