இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிகுழுவின் முதலாவது கூட்டம்

திகதி : 2016-11-25

நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிகுழுவின் முதலாவது கூட்டம் 2016 நவம்பர் 24, வியாழக்கிழமை குழு அறையில் இடம்பெற்றது.

 

தெரிகுழுவின் முதலாவது கூட்டத்தின்போது, இலங்கை பாராளுமன்ற பிரதிச் சபாநாயகர் கௌரவ திலங்க சுமதிபால அவர்கள் தலைமை தாங்கினார். கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்கள் இந்தக் குழு உருவாக்கத்தின் நோக்கம், விசாரணை நியதிகள் மற்றும் குழுவின் நோக்கெல்லை தொடர்பாக விபரித்தார்.

 

1. வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு, அனைத்து பாராளுமன்ற ஒன்றியம், பாராளுமன்ற ஆராய்ச்சி பிரிவு மற்றும் தொடர்புடைய ஐ.நா. செயலாண்மையின் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயற்படல்.

2. தேசிய, மாகாண, மாவட்ட, பிரதேச செயலக மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 17 நிலைபெறுதகு அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட நாட்டின் நிலைமையை மதிப்பீடு செய்தல் மற்றும் ஆசிய மற்றும் உலகளாவிய தரநிலையுடன் எமது தேசிய நிலை தரத்தை ஒப்பிட்டுப் பார்த்தல்.

போன்றவற்றிற்கு குழு ஆழ்ந்த கலந்துரையாடலின் பின்னர் இணங்கியது.

 

குழு உறுப்பினர்களான வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் பிரதி அமைச்சர் கௌரவ (திருமதி) சுமேதா ஜீ. ஜயசேன, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ நிரோஷன் பெரேரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன, கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன், கௌரவ புத்திக பத்திறண, பா.உ., கௌரவ ஈ. சரவணபவன், பா.உ., கௌரவ ச. வியாழேந்திரன், பா.உ. ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom