இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஒக்டோபர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-10-09

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  “அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம்” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
‘B’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─

•    2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVI ஆம் பகுதியையும் ;
•    2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XII ஆம் பகுதியையும்;
•    2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVI ஆம் பகுதியையும்; மற்றும்
•    2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் I ஆம் பகுதியையும்

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் (2017.04.01 -2017.06.30) காலாண்டுக்கான  நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை; மற்றும்
(iii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம், 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் (2017.04.01 -2017.06.30) காலாண்டுக்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 ஆம் ஆண்டின் நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை தொடர்பில்  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ii)    2016 ஆம் ஆண்டின் தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை தொடர்பில்  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை

(iii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(iv)    2013 ஆம் ஆண்டுக்கான தேசிய கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(v)    2016 ஆம் ஆண்டுக்கான ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(vi)    2016 ஆம் ஆண்டுக்கான ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையின் ஆண்டறிக்கை

(vii)    2017 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2017 ஆம் ஆண்டுக்கான அநுராதபுர மாவட்டச் செயலகத்தின் செயற்திறன் அறிக்கையும் ஆண்டுக் கணக்குகளும்
(ix)    2017 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x)    2017 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi)    2017 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயற்திறன் அறிக்கை

(xii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின்  கீழ் தொல்பொருளியல் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் பிரிஷாந்த குணவர்த்தன அவர்களை 2018.01.24 ஆம் திகதி  நடைமுறைக்கு வரும் வகையில்  நியமித்தல் தொடர்பில் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2018 யூன்  29 ஆம் திகதிய 2077/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xiii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின்  கீழ் தொல்பொருளியல் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் பிரிஷாந்த குணவர்த்தன அவர்களை 2018.04.24 ஆம் திகதி முதல் 2018.06.30 ஆம் திகதி வரை நியமித்தல் தொடர்பில் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2018 யூன்  29 ஆம் திகதிய 2077/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xiv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, றுகுணு பல்கலைக்கழகத்தின்  மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் பீடத்தில் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சரால்  ஆக்கப்பட்டு,   2018 யூலை 09 ஆம் திகதிய 2079/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின்  மீது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்  மருத்துவ விஞ்ஞானங்கள் பீடத்தில் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2018 யூலை 09 ஆம் திகதிய 2079/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xvi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, ஊவா வெல்லஸ்ஸ  பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சரால் ஆக்கப்பட்டு  2018 யூலை 09 ஆம் திகதிய 2079/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xvii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவத்துறைக் கற்கைகள் பீடத்தில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத் கற்கைத்துறை மற்றும் மனிதவள முகாமைத்துவக் கற்கைத்துறையொன்றும்   பிரயோக அறிவியல் பீடத்தில் சுகாதார மேம்படுத்தல் கற்கைத் துறை மற்றும் கணினி கற்கைத் துறையை நிறுவுதல் தொடர்பில் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 யூலை 09 ஆம் திகதிய 2079/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xviii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது,  சபரகமுவ பல்கலைக்கழகத்தில்  மருத்துவ பீடம் நிறுவுதல்  தொடர்பில் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஓகஸ்ட் 01 ஆம் திகதிய 2082/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(xix)    2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க,  குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல்  சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2018 செப்டெம்பர் 11 ஆம் திகதிய 2088/28  ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில்  பிரசுரிக்கப்பட்ட  கட்டளை

(xx)    2016 ஆம் ஆண்டின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாற்றுகை தொடர்பில்  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம். ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மலிக் ஜயதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ வசந்த அலுவிஹாரே                    
(ii)    கௌரவ (திருமதி) சுமேதா ஜீ. ஜயசேன                    
(iii)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே            -    இரண்டு மனுக்கள்
(iv)    கௌரவ சிறினால் டி மெல்                    
(v)    கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண        -    மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ தினேஷ் குணவர்தன

ஓய்வூதியதாரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாண பல்கலைக்கழக தாதியர் பயிற்சி நெறிக்கான பதிவு செய்தல் மற்றும் அங்கீகாரம்

மேற்சொன்ன வினாவிற்கு உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்கள் பதிலளித்தார்.

(iii)    கௌரவ அநுர திசாநாயக்க

தொழிற்சங்க ஆர்வலர்களை இடமாற்றம் செய்தல் காரணமாக கொழும்பு துறைமுக ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ நிஷாந்த முதுஹெட்டிகமகே அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(i)    2019 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின்போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாடுகளைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளின் மீதான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டுநிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள அல்லது அதன் கையாளுகையிலுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணமாகக் கொடுப்பதை இயலச் செய்வதற்கும்; திரட்டுநிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“ஒதுக்கீடு”

எனும் சட்டமூலத்தினை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள் பிரேரித்தார்.

(ii)    பயங்கரவாதச் செயல்களுக்கெதிராகவும் பயங்கரவாதத்துடன் இணைந்த வேறு தவறுகளுக்கெதிராகவும் இலங்கையையும் இலங்கை மக்களையும் பாதுகாப்பதற்காகவும்; இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியே புரியப்படுகின்ற பயங்கரவாதத்தையும் பயங்கரவாதத்துடன் இணைந்த வேறு தவறுகளையும் தடுப்பதற்காகவும்; இலங்கைக்கு வெளியே பயங்கரவாதத்துக்கான ஆயத்தஞ்செய்வதற்காக இலங்கையின் ஆள்புலத்தையும் அதன் மக்களையும் பயன்படுத்துவதனைத் தடுப்பதற்காகவும் ஏற்பாடுசெய்வதற்கும்; பயங்கரவாதச் செயல்களையும் பயங்கரவாதத்துடன் இணைந்த வேறு தவறுகளையும் கண்டுபிடிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் பயங்கரவாதச் செயலொன்றை அல்லது பயங்கரவாதத்துடன் இணைந்த வேறு ஏதேனும் தவறைப் புரிந்துள்ள எவரேனுமாளை அடையாளங்காணுதல், விசாரணைக்காகப் பற்றுதல், கைதுசெய்தல், அவரின் கட்டுக்காப்பு, அவரைத் தடுத்துவைத்தல், புலனாய்வுசெய்தல், அவருக்கெதிராக குற்றவழக்குத் தொடுத்தல் மற்றும் அவருக்குத் தண்டனையளித்தல் என்பவற்றுக்காகவும்; 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்குவதற்காகவும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்காக

“பயங்கரவாத எதிர்ப்பு”

எனும் சட்டமூலத்தினை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ திலக் மாரபன அவர்கள் பிரேரித்தார்.

(iii)    வேறொருவரின் தவறான செயல், செய்யாமை, கவனயீனம் அல்லது தவறுகை ஒன்றினால் விளைவிக்கப்பட்ட ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுவதற்காக ஏற்பாடு செய்தற்கும் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக

“ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுதல்”

எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1926 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஒக்டோபர் 10ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom