இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 செப்டெம்பர் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-09-04

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ : படைக்கலச் சேவிதர் பதவிக்கான நியமனம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் வருடாந்த செயற்திறன் அறிக்கை மற்றும் கணக்குகள்
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் செயற்பாட்டு அறிக்கை

(iii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை காப்புறுதிச் சபையினது ஆண்டறிக்கை
(iv)    2014 ஆம் ஆண்டுக்கான சீதுவை விஜயகுமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஆண்டறிக்கை
(v)    2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் பேரவையின் வருடாந்த அறிக்கை
(vi)    2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தின் ஆண்டறிக்கை

(vii)    தேசிய அரசுப் பேரவையின்  1977 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க,  மீள ஒப்படைத்தல் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ்,  இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் துருக்கிக் குடியரசிற்கும் இடையே மீள ஒப்படைத்தல் பொருத்தனை தொடர்பில் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு, 2018 யூலை 13 ஆம் திகதிய 2079/77 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(viii)    1998 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனத்தினை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் 18 ஆம் பிரிவின் கீழ் கட்டண அறவீடுகளை திருத்துவது தொடர்பில் பாதுகாப்பு  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 யூன் 07 ஆம் திகதிய 2074/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்

(ix)    2016 ஆம் ஆண்டின் சனாதிபதி அலுவலம், வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களம்
(x)    2016 ஆம் ஆண்டின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின்
(xi)    2016 ஆம் ஆண்டின் திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி அமைச்சு மற்றும் தொழிநுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்
(xii)    2016 ஆம் ஆண்டின் தேசிய பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் - கொழும்பு
(xiii)    2016 ஆம் ஆண்டின் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின்
(xiv)    2016 ஆம் ஆண்டின் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம்
(xv)    2016 ஆம் ஆண்டின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின்
(xvi)    2016 ஆம் ஆண்டின் அரச நிருவாக முகாமைத்துவ அமைச்சு, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, பொலிஸ் திணைக்களம் மற்றும் ஓய்வூதியத் திணைக்களம்
(xvii)    2016 ஆம் ஆண்டின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின்
(xviii)    2016 ஆம் ஆண்டின் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின்
(xix)    2016 ஆம் ஆண்டின்  தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்  அமைச்சு,  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் தபால் திணைக்களம்

செயலாற்றுகை தொடர்பில்  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்

(xx)    2018 ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டின் நிதிசார் செயலாற்றுகை தொடர்பான அறிக்கை
(xxi)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அதே சட்டத்தின் 2, 12, 22 மற்றும் 25 ஆம் பிரிவுகளின் கீழ் மதுவரித் தீர்வை தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 யூன் 13 ஆம் திகதிய 2075/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 10/2018)
(xxii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவின் கீழ் மதுவரித் தீர்வை தொடர்பில்  நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 யூன் 13 ஆம் திகதிய 2075/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 11/2018)
(xxiii)    1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் 2018 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபை (ஈரான் தொடர்பான தடை விதிப்புகள்) தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரால்  ஆக்கப்பட்டு, 2018 ஓகஸ்ட் 21 ஆம் திகதிய 2085/11 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்ட 2018 யூலை 17 ஆம் திகதிய 2080/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(xxiv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் எஸ் எல் ரி கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட், இலத்திரனியல் தொழில்நுட்பவியல் சிறப்பு இளமாணி பட்டம் வழங்கல் நிறுவனமாக ஏற்றுக்கொண்டு தொடர்பில் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஓகஸ்ட் 10 ஆம் திகதிய 2083/35 ஆம்  இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை குழுவின் தவிசாளர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்களுக்குப் பதிலாக கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம். ஏ. சுமந்திரன்  அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ  ஹர்ஷண ராஜகருணா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ லக்கி ஜயவர்தன                    
(ii)    கௌரவ புத்திக பத்திறண                            -           நான்கு மனுக்கள்
(iii)    கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன                   
(iv)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                         -            நான்கு மனுக்கள்          
(v)    கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன                    
(vi)    கௌரவ திளும் அமுணுகம   
(vii)    கௌரவ முஜிபுர் ரஹுமான்                     
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ தினேஷ் குணவர்தன

தனியார் பஸ் சேவையை கட்டுப்படுத்தல் தொடர்பானது

மேற்சொன்ன வினாவுக்கு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தையும், 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தையும், 2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தையும், 1995 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தையும், 2015 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தையும் திருத்துவதற்கும்; மோட்டார் வாகனங்கள் மீதான ஆடம்பர வரியையும், வாகன உரித்துடைமை அறவீட்டையும், வருடாந்தக் கம்பெனிப் பதிவு அறவீட்டையும், தனிசு மீள்கொடுப்பனவு அறவீட்டையும், கார்பன் வரியையும், செல்லிடத் தொலைபேசிக் கோபுர அறவீட்டையும் மற்றும் செல்லிடத் தொலைபேசிக் குறுஞ்செய்திச் சேவை அறவீட்டையும் விதிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“நிதி”

எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 3 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டதுடன் 5ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது:-

(i)    காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கு ஊதியமொன்றைச் செலுத்தல்
(ii)    இலங்கையில் இன மற்றும் மத ஒற்றுமையை உறுதி செய்வதை ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான  பாராளுமன்ற தெரிகுழு
(iii)    இலங்கை ஒளடதங்கள் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


அதனையடுத்து, 1525 மணியளவில் பாராளுமன்றமானது 2018 செப்டெம்பர் 05ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom