இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஜுலை 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-07-05

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(iv) 2015 ஆம் ஆண்டுக்கான நீர் வளச் சபையின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ காமினி லொக்குகே அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ துமிந்த திசாநாயக்க             -      மூன்று மனுக்கள்
(ii)     கௌரவ திலிப் வெதஆரச்சி             -      மூன்று மனுக்கள்
(iii)    கௌரவ புத்திக பத்திறண                -      மூன்று மனுக்கள்
(iv)    கௌரவ சாலிந்த திசாநாயக்க                    
(v)    கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி                                
(vi)    கௌரவ அநுராத ஜயரத்ன              -       இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சீனாவுடனான ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு தொடர்பாக கூற்றொன்றினை முன்வைத்தார்.


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அஜித் பி. பெரேரா அவர்களால் 2018 யூலை 04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தேசிய கணக்காய்வு சட்டமூலம்

சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மத்தளை சர்வதேச விமானநிலையத்தை விற்பனை செய்வதை தடுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கனக ஹேரத் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1947 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜூலை 06ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom