இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஜூன் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-06-07

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : பிணைமுறி ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பாக பாராளுமன்றத்திற்கு உள்ளே மற்றும் வெளியே பரவும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் அறிக்கைகளினால் பாராளுமன்ற உறுப்பினர்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தல்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவை அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான புத்தசாசன அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தின் செயற்திட்ட அறிக்கை
(iv)    2017 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2017 ஆம் ஆண்டுக்கான அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயற்திறன் அறிக்கை
(vi)    2017 ஆம் ஆண்டுக்கான மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கை
(vii)    2017 ஆம் ஆண்டுக்கான நீதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2017 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix)    2017 ஆம் ஆண்டுக்கான சட்ட ஆணைக்குழுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(x)    2017 ஆம் ஆண்டுக்கான மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi)    2017 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுத்துறை அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(xii)    2015 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மலித் ஜயதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன                    
(ii)    கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன                    
(iii)    கௌரவ சமிந்த விஜேசிறி                    
(iv)    கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி                   -     மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சை குளம் நீர்ப்பாசன வாவி வான்கதவு திறக்கப்பட்டதன் காரணமாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பானது

(ii)    கௌரவ அநுர திசாநாயக்க

இலங்கை மின்சார சபையினை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்க தலைவர்களின் சேவை இடைநிறுத்தல் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் பி. பெரேரா அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஐந்து அறிவித்தல்கள்

சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்புப் பிரேரணை

“நாட்டிலுள்ள நிதி நிறுவனங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கலான நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜூன் 08ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom