இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஜூன் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-06-05

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திலங்க சுமதிபால அவர்கள் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பான கடிதம்
‘B’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
‘C’ : பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னர் வெளியிடப்படாத பகுதிகள் சில தொடர்பாக


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் விசேட அறிக்கையின் பத்தாவது தொகுதியின் XIII ஆம் பகுதியை (இலங்கையின் விளையாட்டுக்கள் மற்றும் அதன் நிர்வாகம் மீதான விசேட கணக்காய்வு அறிக்கை)


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    22017 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் நிறைவேற்று அறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2017 ஆம் ஆண்டுக்கான வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2017 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2017 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றறிக்கையும் கணக்கறிக்கையும்
(vii)    2017 ஆம் ஆண்டுக்கான மொனராகலை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை மற்றும் கணக்குகளும்
(viii)    2017 ஆம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் செயற்திறன் அறிக்கை மற்றும் ஆண்டுக் கணக்குகள்
(ix)    2017 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை மற்றும் கணக்குகள் அறிக்கை
(x)    2014 ஆம் ஆண்டுக்கான தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பெறுபேற்று அறிக்கை
(xi)    2017 ஆம் ஆண்டுக்கான அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் வருடாந்த செயற்திறன் அறிக்கையும் கணக்குகளும்
(xii)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(xiii)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xiv)    2016 ஆம் ஆண்டுக்கான தொழில் திணைக்களத்தின் ஆண்டறிக்கை

(xv)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 25 ஆம் பிரிவின் கீழ்,  மதுவரி தொடர்பாக   நிதி மற்றும் வெகுசன ஊடக  அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 ஏப்ரல் 09 ஆம் திகதிய 2066/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 08/2018)
(xvi)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 25 ஆம் பிரிவின் கீழ்,  மதுவரி தொடர்பாக  நிதி மற்றும் வெகுசன ஊடக  அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 ஏப்ரல் 06 ஆம் திகதிய 2065/57 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 09/2018)
(xvii)    2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் (3) ஆம் பிரிவின் கீழ்,  துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக  நிதி மற்றும் வெகுசன ஊடக  அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 திசெம்பர் 13 ஆம் திகதிய 2049/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(xviii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் வியாபார பீடமொன்றை நிறுவுவது தொடர்பில்  ஆக்கப்பட்டு, 2017 பெப்ரவரி 08 ஆம் திகதிய 2005/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 24அ(1) பிரிவின் கீழ்  உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சுதேச மருத்துவப் பட்டப்பின் நிறுவகத்தை நிறுவுவது தொடர்பில்  ஆக்கப்பட்டு, 2017 ஆகஸ்ட் 09 ஆம் திகதிய 2031/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ வடிவேல் சுரேஷ் அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ கயந்த கருணாதிலக்க                    
(ii)    கௌரவ அஜித் பி. பெரேரா                               -     இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ பாலித குமார தெவரப்பெரும                    
(iv)    கௌரவ எஸ். பீ. திசாநாயக்க                    
(v)    கௌரவ சாலிந்த திசாநாயக்க                           -     இரண்டு மனுக்கள்
(vi)    கௌரவ குமார வெல்கம                    
(vii)    கௌரவ வாசுதேவ நாணாயக்கார                   -      மூன்று மனுக்கள்
(viii)    கௌரவ சந்திம வீரக்கொடி                    
(ix)    கௌரவ நிஹால் கலப்பத்தி                            -     இரண்டு மனுக்கள்
(x)    கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன                    
(xi)    கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா                    
(xii)    கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண                    
(xiii)    கௌரவ அஜித் மான்னப்பெரும                    
(xiv)    கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

தென்மாகாணம் முழுதும் பரவிவரும் இன்புலுவென்சா நோய்

மேற்சொன்ன வினாவிற்கு சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன அவர்கள் பதிலளித்தார்.


பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளரும் தேர்வு

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்கள் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் தவிசாளர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பில் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தை திருத்துவதற்காக

“குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


அதனையடுத்து, 1713 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜூன் 06ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom