இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 டிசம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-12-09

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : இணைந்த வருடாந்த பொதுக் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 55 (5) உறுப்புரைகளின் பிரகாரம், 201 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான (2017.07.01 - 2017.09.30) அரசாங்க  சேவை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சமிந்த விஜேசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரீ. பீ. ஏக்கநாயக்க                    
(ii)    கௌரவ சுஜீவ சேனசிங்க                    
(iii)    கௌரவ விமலவீர திசாநாயக்க

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து ஆட்சேர்த்தல் தொடர்பாக கூற்றொன்றினை முன்வைத்தார்.

(ii)    வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை முன்னறிவிப்புக்கள் தமிழில் வழங்கப்படாமை தொடர்பாக 2017.12.07 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2018) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட இருபத்தி நான்காம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) 2018, 99 பெரும்பான்மை வாக்குகளால் சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 23 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(ii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(iii)    உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(iv)    வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் பதின்மூன்று கட்டளைகள்
(v)    சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம்
(vi)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நான்கு அறிவித்தல்கள்
(vii)    சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம்
(viii)    உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (திருத்தச்)  சட்டமூலம் - வாக்கெடுப்பின் போது (ஆதரவாக 137; எதிராக 49)


அதனையடுத்து, 1847 மணியளவில் பாராளுமன்றமானது 2017 டிசம்பர் 11ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2018]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom