இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 டிசம்பர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-12-08

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம் (2017 நவம்பர் 09  ஆம் திகதிய 2044/31ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரிற்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் நான்காவது (2017.01.24 முதல் 2017.05.24 வரையிலான) அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ லசந்த அழகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ புத்திக பத்திறண                    
(ii)    கௌரவ நாமல் ராஜபக்ஷ                -         இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா                    
(iv)    கௌரவ இம்ரான் மஹ்ரூப்                    
(v)    கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ தினேஷ் குணவர்தன

முன்னாள் சனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் பாதுகாப்பை அதிகரித்தல்

மேற்சொன்ன வினாவிற்கு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்தல் தொடர்பாக கூற்றொன்றினை முன்வைத்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கு “மோகன் லங்கா மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ கே. காதர் மஸ்தான் அவர்களுக்கு “ஆயிஷா கல்வி நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2018) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட இருபத்தி மூன்றாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"

(ii)    செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் தீர்மானங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை)

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 72; எதிராக 07) சபையினால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1954 மணியளவில் பாராளுமன்றமானது 2017 டிசம்பர் 09ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2018]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom